கள்ளக்குறிச்சி
மாதாந்திர கூட்டம்
24.09.2024 காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி பகுதி மாதாந்திர கூட்டம் பகுதி தலைவர் செல்லமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தோழர் மணி வரவேற்புரையாற்றினார்.
மாவட்டச் செயலர் தோழர் R.அசோகன் அவர்கள் தனது உரையில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு உள்ள பிரச்சனைகள் அதிகம் உள்ள பகுதியாக கள்ளக்குறிச்சி உள்ளது. பிரச்சனை தீர கள்ளக்குறிச்சி தோழர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும், வாழ்நாள் சான்றிதழ், மெடிக்கல் அலவன்ஸ், CGHS, ஓய்வூதியர்களுக்கு வரவேண்டிய பென்ஷன் நிலுவை தொகை மற்றுமுள்ள பிரச்சனைகளை பற்றி விளக்கி பேசினார்.
அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் ஜெயராமன் அவர்கள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலவில் நடைபெற்ற மத்திய செயற்குழு முடிவுகள், பென்ஷன் உயர்வு வழக்கு விபரங்களை தொகுத்து உரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் தோழர் R.நந்தகுமார் LC கொடுப்பதை காலத்தில் அளித்திடவும், தவறும் பட்சத்தில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிரமங்களை பற்றியும் அதனால் மாவட்ட சங்கத்திற்கு உள்ள சிரமங்களையும் எடுத்துரைத்தார்.
கள்ளக்குறிச்சி தோழர்கள் EC. கண்ணன், தோழர் மணி, தோழர் பெத்து நாயக்கன் ஆகியோர் பிரச்சனைகளை எடுத்துரைத்தனர்.
தோழர், தோழர்கள் நிறைவாக கலந்து கொண்டனர்.
தோழர் பெத்து நாயக்கன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment