பண்ருட்டி
பகுதி ஓய்வூதிய சங்கத்தின் மாதாந்திரக்கூட்டம்
6-10-2024
தோழர் K.பழனிமுத்து அவர்கள் தலைமையில் சிறப்புடன்
நடைபெற்றது. தோழர் S.பாஸ்கரன் அனைவரையும் வரேவேற்று
பண்ருட்டி பகுதியில் உறுப்பினர்களின் பிரச்சனைகளை மாவட்டச்சங்கத்தின் கவனத்திற்கு
உடனடியாக தெரிவித்து சரி செய்துவருகிறோம் என தெரிவித்தார்.
தோழர்
சுந்தரமூர்த்தி தீர்க்கப்பட்ட உறுப்பினர்களின் அன்றாட பிரச்சனைகள்,தீர்க்கப்பட வேண்டி நிலுவையிலுள்ள பிரச்சனைகள் பற்றிய விவரங்களை
எடுத்துரைத்து பிரச்சனைகள் தீர்வில் மாவட்டச் சங்கம் கூடுதல் கவனம் செலுத்தி
வருவதை பாராட்டினார்.
பிரச்சனைகள்
பற்றிய விவாதங்களில் தோழர்கள் மாரிமுத்து, நடராஜன்,
தியாகராஜன், மாயகிருஷ்ணன் ஆகியோர்
கருத்துக்களை தெரிவித்தனர்.
மாவட்டச்சங்க
சிறப்பு அழைப்பாளர் தோழர் லோகநாதன் பிரச்சனைகள் தீர்வில் மத்திய,
மாநில, மாவட்டச்சங்கங்களின் சிறப்பான
செயல்பாட்டினையும், பென்ஷன் ரிவிஷன் இன்றய நிலை ,தற்கால அரசியல் சூழல் ஆகியவற்றைப்பற்றி கருத்துரை வழங்கினார்.
தோழர் ரங்கராஜ் பண்ருட்டி பகுதியில் கிளையை உருவாக்கி மாதாந்திரக்கூட்டங்களில் இப்பகுதி உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்பது,மத்திய ,மாநில,மாவட்டச்சங்க செய்திகளை அனைவரும் தெரிந்துகொள்வதற்கு நல்லவாய்ப்பாகவுள்ளது,மேலும் LIFE CERTIFICATE உறுப்பினர்கள் பண்ருட்டியிலே எடுத்துக்கொள்ளலாம் என்ற விவரங்களை தெரிவித்தார்.
மாவட்டச்செயலர்
தோழர் அசோகன் பண்ருட்டி பகுதியில் 78.2 உறுப்பினர்களுக்கு கிடைத்திட
உரிய நடவடிக்கை எடுத்துவருகிறோம். தோழர்கள் துரைராஜ், மாரிமுத்து
உத்தரவு பெற்றுள்ளோம். தோழர் சாம்பசிவம் அவர்களுக்கும் விரைவில் கிடைத்திட
நடவடிக்கை எடுத்துள்ளோம். அக்டோபர் மாத ஊதியத்துடன் அனைவருக்கும் நிலுவைத்தொகையும்
கிடைக்கும் எனவும், மாவட்டசங்கம் பிரச்சனைகள் தீர்வில்
கூடுதல் கவனம் செலுத்திவருகிறது என விவரங்களை தந்திட்டார்.
அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் ஜெயராமன், அவர்கள், மத்திய செயற்குழு முடிவுகள், பென்ஷன் ரிவிஷன் அடுத்தக்கட்ட நகர்வு, CGHS, சென்னை கூட்டுறவு சொசைட்டி பிரச்சனைகள் தீர்விற்காக மத்திய சங்கம் டெல்லியில் Central Register யை சந்தித்து விவாதிப்பதற்கான நடவடிக்கை எடுத்துவருவது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பல்வேறு செய்திகளை சிறப்புரையாக தந்திட்டார்.
No comments:
Post a Comment