Friday 26 April 2024


 

 மாவட்டச் சங்க 

செயலக கூட்டம்

22.04.2024 திங்கள் கிழமை அன்று கடலூர் பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்ட செயலகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் K.சந்திரமோகன் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 

1. மத்திய சங்க பொதுச் செயலாளர் தோழர் V.வரபிரசாத், மாநிலச் செயலாளர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன், அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் P.ஜெயராமன் மற்றும் நமது சங்கத்தை சேர்ந்த மூத்த தோழர் சுகுமாரன் ஆகியோர்களை சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 

2. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்பு அழைப்பாளர் பதவியை அளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அந்தப் அந்தப் பதவியை மகளிர்க்கு ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்ட சங்க நிர்வாகிகள் 25+10 சிறப்பு அழைப்பாளர்கள். 

 கடலூர் பகுதி=16

விழுப்புரம் பகுதி=6+1

திண்டிவனம் பகுதி=3

 (திண்டிவனம் +செஞ்சி)

விருத்தாச்சலம் பகுதி=2

கள்ளக்குறிச்சி பகுதி=2

சிதம்பரம் தொகுதி=4+1

மொத்தம்=35 பதவிகள். 

3. சார்பாளர் கட்டணம் வசூலிக்க தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. 

4. மாவட்ட மாநாட்டிற்கு ஏறக்குறைய ரூபாய் மூன்றரை லட்சம் முதல் 4 லட்சம் வரை செலவாகும் என்று உத்தேசமாக கணக்கிடப்பட்டது. இதுவரையில் மாவட்ட சங்கத்திற்கு வந்துள்ள மாநாட்டு நன்கொடை ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம். அந்தந்த பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து உறுப்பினர்களும் தங்களது பங்களிப்பை தருவதற்கு முயற்சி செய்யவும்.

5. நினைவு பரிசு (gift) தேவையில்லை என்று மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு உறுதி செய்யப்பட்டது. 

6. பண்ருட்டி, நெய்வேலி அடங்கிய ஒரு பகுதி அமைப்பை உருவாக்கிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. மாவட்ட மாநாட்டில் இது சம்பந்தமாக முடிவெடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

7. பேட்ஜ் செய்யலாமா என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளது. நிலைமைக்கு ஏற்றவாறு மாவட்ட சங்கம் முடிவு செய்து கொள்ளும். 

8. பொதுச்செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளதால் அனைத்து பகுதிகளில் இருந்து அதிகமான உறுப்பினர்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் இதில் ஒத்துழைக்க வேண்டுமாய் தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.

9. மாவட்ட மாநாட்டிற்கு முன்பு 18/05/2024 அன்று மாவட்ட செயற்குழு நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தோழமையுடன்,

R.அசோகன் 

மாவட்ட செயலாளர் 


Sunday 14 April 2024

 கடலூர் பகுதியின் மாதாந்திர கூட்டம் 

13/4/2024 சனிக்கிழமை மதியம் 03:30 மணி அளவில் பகுதி தலைவர் தோழர். B.கந்தசாமி அவர்கள் தலைமையில் நமது சங்க வளாகத்தில் நடைபெற்றது. பகுதி அமைப்பு செயலாளர் தோழர். E.விநாயகமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மே மாதம் நடைபெற இருக்கின்ற மாவட்ட மாநாட்டிற்கான நன்கொடை , வழக்கு நிதி, மாவட்ட மாநாட்டை ஒட்டி கடலூர் பகுதி மாநாட்டை நடத்துவது, ஓய்வூதிய மாற்ற வழக்கினைப் பற்றிய கருத்துக்கள், தனிநபர் பிரச்சனைகள் இவற்றைப் பற்றி கருத்துக்களை கூறுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும் பண்ருட்டி மற்றும் நெய்வேலி பகுதியில் இருக்கின்ற உறுப்பினர்களுக்கென தனியாக ஒரு பகுதியை துவக்குவது பற்றியும் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தோழியர்.V.விஜயலட்சுமி அவர்கள் பேசும்பொழுது மார்ச் மாதம் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அரசு பள்ளியை சேர்ந்த ஒரு ஏழை மாணவி கல்விக்கு உதவி செய்யும் வகையில் ₹12,000 நன்கொடை பெறப்பட்டுள்ளது என்று பதிவு செய்தார். வரும் கல்வியாண்டில் இருந்து நாம் இந்தப் பணியை மேற்கொள்ளலாம் என்றும், மத்திய சங்க வேண்டுகோளின்படி வழக்கு நிதியையும், மாவட்ட மாநாட்டு நிதியையும் தாராளமாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்

மாவட்ட உதவி தலைவர் தோழர். P. சாந்தகுமார்,மாவட்டத் தலைவர் தோழர்.K. சந்திரமோகன், அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர்.P. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

மாவட்ட செயலர் தோழர்.R.அசோகன் அவர்கள் பேசும்பொழுது FMA பிரச்சனையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை நாம் அடைந்ததை குறிப்பிட்டார். கடைசி காலாண்டு வரை போடப்பட்டுவிட்டது என்ற செய்தியை கூறினார். PAN Aadhaar இணைப்பு பற்றி பலமுறை எடுத்துக் கூறியும் செய்யாதவர்களுக்கு மட்டும் 20% வருமான வரி FMAவில் பிடித்துள்ளதையும் கூறினார். உயிர்வாழ் சான்றிதழ் அளிப்பதிலும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதிலும் நமது மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். 28.05.2024 அன்று நடைபெறப் போகும் நமது மாவட்ட மாநாட்டிற்கு அகில இந்திய செயலர் வருகை தர இருக்கிறார். எனவே அதற்கான சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட சங்கம் செய்து வருகிறது என்ற தகவலையும் கூறினார். மாவட்ட மாநாட்டிற்கான நன்கொடையையும் வழக்கு நிதியையும் தோழர்கள் விரைவில் செலுத்த வேண்டும் என்று நினைவூட்டினார். பண்ருட்டி மற்றும் நெய்வேலி தோழர்களை உள்ளடக்கி தனியாக ஒரு பகுதியாக செயல்படுவதை பற்றி மாவட்ட மாநாட்டில் முடிவெடுக்கலாம் என்று கூறினார். ஆள் பற்றாக்குறை இருந்த போதும் நமது பொது மேலாளர் அலுவலகத்தில் நமக்கு கிடைக்கும் சிறப்பான ஒத்துழைப்பினைப் பற்றி பெருமையோடு குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி கூறினார். 

நிறைவாக கடலூர் பகுதி பொருளாளர் தோழர்.R.நந்தகுமார் அவர்கள் மாவட்ட மாநாட்டு நன்கொடை, வழக்கு நிதி ஆகியவற்றை தோழர்கள் விரைவில் தர வேண்டும் என்ற வேண்டுகோளோடு அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.




Thursday 14 March 2024

சிதம்பரம் பகுதி 

ஆண்டு மாநாடு 

மற்றும் 

மகளிர் தின விழா 

              12.3.24 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி சார்பாக தெற்கு சன்னதி நாடார் சத்திரத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டமும், மகளிர் தின விழாவும் பகுதி தலைவர் டி.விஸ்வலிங்கம் விஜயலட்சுமி நந்தகுமார் இணைந்த தலைமையில் நடைபெற்றது. பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ்.குமார் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கையினை சமர்பித்தார். 

     மாவட்ட செயலாளர் ஆர்.அசோகன், தலைவர் கே.சந்திரமோகன், எஸ்.சாந்தகுமார், வி.இளங்கோவன், ஏ.ஜெயக்குமார்,எச்.இஸ்மாயில் மரைக்கார், கள்ளக்குறிச்சி தோழர் மணி, மகளிர் சார்பில் என்.விஜயலட்சுமி, டி.ராஜகுமாரி, கடலூர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன், கீதா ஜவகர், ஆர்.கயல்விழி வாழ்த்துரையும் மகளிர் தின சிறப்புகள் பற்றியும் பேசினார்கள். 

தமிழ் மாநில தலைவர் வி.சாமிநாதன், அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் தோழர் P.ஜெயராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மூத்த தோழியர் சரஸ்வதி ராமச்சந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார் 

தோழர்கள் ஜி.எஸ்.குமார் தலைவராகவும், டி.விஸ்வலிங்கம் செயலாளாராகவும்,கே.லட்சுமிநாராயணன் பொருளாளராகவும் 2024-2026ம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

விழா ஏற்பாடுகளை கே.லட்சுமி நாராயணன் தலைமையில் தோழர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, வி.கருணாநி தி,என்ராஜேந்திரன்,நாகராஜு, மாதேஸ்வரன், டெல்லி பாபு, சுந்தர் செய்திருந்தனர். 25 மகளிர் உட்பட 100 ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். ‌

புதிய பகுதி செயலாளர் டி.விஸ்வலிங்கம் நன்றி கூறிய பின் விழா நிறைவு பெற்றது.





Wednesday 13 March 2024

விழுப்புரம் பகுதி மாதாந்திர கூட்டம் -03/03/2024


  03/03/2024 அன்று விழுப்புரம் பகுதி மாதாந்திரகூட்டம் காலை 10 மணிக்கு பகுதி துணை தலைவர் S தஸ்தஹிர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 9 தோழியர்கள் உட்பட 79 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தை S செல்வம் பாட வரவேற்புரையை பகுதி செயலாளர் G கணேசன் ஆற்ற  மகளிர் தின வாழ்த்து களுடன் கூட்டம் இனிதே ஆரம்பம் ஆனது. 

வாழ்த்துரையில் தோழர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மாவட்டத் தலைவர்  K சந்திரமோகன் அவர்கள் வருமான வரி ,ஆதார் எண் பான் கார்டு எண் இணைப்பு பல்வேறு தகவல்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறப்புரை யில் நமது அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் P  ஜெயராமன் பென்ஷன் சம்மந்தப்பட்ட செய்திகள்குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு செய்திகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் 

மாதாந்திர கூட்டதிற்கு மதிய உணவு அளித்த தோழர்  D சண்முகசுந்தரம் Rtd CAO அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.. தோழியர் S தேவா மகளிர் சார்பாக நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

திண்டிவனம் மாதந்திர கூட்டம் - 06-03-2024

 அன்பு தோழர்களே !! தோழியர்களே!!!

வணக்கம்,

திண்டிவனம் AIBSNLPWA சங்கத்தின் சார்பாக 06-03-2024 அன்று தோழர் K புண்ணியகோட்டி TT கூட்டுத் தலைமையில் நடை பெற்ற மாதந்திர கூட்டம் மற்றும் மகளிர் தின விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் D திருவிக்கிரன் TT அவர்கள் வரவேற்புரையாற்றினார். 22 தோழியர்கள் 25 தோழர்கள் 47 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நமது சங்கத்தின் அகில இந்திய துணை பொது செயலாளர் அண்ணாச்சி அவர்கள்  தைரியம் தன்னம்பிக்கை விடா முயற்சி போன்ற செய்திகளை பட்டியலிட்டு ஆதாரத்தோடு விளக்கி கூறினார்கள். 

 மற்றும் தோழர்கள் S.நாராயணசாமி Sr TOA, S. நடராஜன்  SDE Groups Y.ஹாருன் பாஷா JE திண்டிவனம் பகுதி சமூக‌ ஆர்வலர், R.மேனகா STS , பரிமளா JTO ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். சிதம்பரம் தோழியர் ராஜகுமாரி தமிழ்மணி மாவட்ட அமைப்பு செயலாளர் பேசுகையில் கூட்டமே அமைதி காத்து அனைவரும் அவரது பேச்சை கேட்டு ரசித்து பரவசமடைந்தனர். இறுதியாக தோழர் பரமசிவம் அவர்கள் கொண்டு வந்த மகளிர் தின   கேக்கை அனைத்து தோழியரும் ஒன்று கூடி உற்சாகமாக கேக்கை வெட்டி இனிப்பு வழங்கி ஒருவொருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். அனைத்து தோழியருக்கும் தோழியர் R.மேனகா STS அவர்கள் சால்வை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள். 

இறுதியாக தோழர் J. தர்மலிங்கம் SDE O/D அவர்கள் நமது பகுதி செயல்பாட்டை பற்றி புகழ்ந்து பேசி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. மற்றும் இந்த கூட்டம் நடைபெற உதவியாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பகுதியின் சார்பாக நன்றியயை தெரிவித்துக்கொள்கின்றோம்.




Monday 11 March 2024

 விருத்தாசலம் பகுதி மாதாந்திர கூட்டம்

விருத்தாச்சலம் பகுதியின் மாதாந்திர கூட்டம் 10.3.2024 மாலை நான்கு மணி அளவில் தலைவர் திரு.ஞானசேகரன் தலைமையில், பகுதி செயலாளர் தோழர்.ரா. ராமலிங்கம் வரவேற்புரை நல்கிட 38 தோழர்கள் முன்னிலையில் துவங்கியது. 

விருத்தாசலம் பகுதி உறுப்பினர் தோழர் K.கனகராஜ் மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சாந்தகுமார் அவர்கள் தனது கருத்துரையில் CGHS சம்பந்தமான பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார். இடையில் நம் உறுப்பினர்களின் சந்தேக வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். 

அடுத்து நமது விருதை பகுதியின் பொறுப்பாளர் தோழர் K.வெங்கட்ரமணன் அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு நீண்ட தொரு வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். 

நமது மாவட்ட தலைவர் தோழர் சந்திரமோகன் அவர்கள் தனது உரையில் CGHS , LIFE CERTIFICATE, INCOME TAX , PENSION REVISION போன்ற பல்வேறு செய்திகளை மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறினார். இடை இடையே உறுப்பினர்களின் சந்தேக வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். 

இறுதியாக அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் பா.ஜெயராமன் தனது கருத்துரையில் மகளிர் தின வாழ்த்துக்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு இச்சங்கம் தீர்த்து வைத்த பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டார். 

தோழர்கள் உளுந்தூர்பேட்டை நசீர்பாஷா, ஜகந்நாதன், நல்லதம்பி, சுந்தர்ராஜ், திட்டக்குடி சுப்பிரமணியன்,பெண்ணாடம் கணபதி, விருதை கலைமணி ஆகியோர் தங்கள் கருத்துக்களை வழங்கினர். 

 இறுதியாக தோழர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.