Monday, 7 April 2025

 06.04.2025 AIBSNLPWA விழுப்புரம் பகுதி சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம்

தோழர் .பெருமாள் தலைமையில் நடைபெற்றது. பகுதி ஒருங்கிணைப்பாளர். தோழர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்ட பிறகு மறைந்த தோழர். யூசுப்கானுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி  செலுத்தப்பட்டது.

தோழர் G.கணேசன் தங்கள் பகுதி செயல்பாடுகள் பற்றியும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்தும் மாவட்ட சங்கத்திற்கு தகவல்களைத் தொகுத்து வழங்கினார்.

தோழர்கள். மோகன்குமார், தஸ்தகீர்கான், ஹரிகிருஷ்ணன் , CAO சண்முக சுந்தரம், செல்வம், உளுந்தூர்பேட்டை தோழரும் மாவட்ட சங்கத்தின் நிர்வாகியுமான தோழர்.ஜெகன்னாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தோழர்.P.ஜெயராமன் DGS, தகுந்த பதில்களையும் நம் சங்கம் எடுத்து வரும் சரியான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் 25.03.25 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பென்ஷன் மசோதா திருத்த வரைமுறை குறித்தும் அதனால் பென்ஷனருக்கு வரப்போகும் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றியது சிறப்பாக  இருந்தது.

மாநில சங்கத் துணைத் தலைவர். தோழர். N.T 03.04.25 அன்று  கடலூர் மாவட்டம் அனைத்து தமிழக அரசு பென்ஷனர்கள், பொதுத்துறைப் பென்ஷனர்கள், அஞ்சல் துறை பென்ஷனர்கள், DOT,BSNL பென்ஷனர்கள் நலச்சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து கடலூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பெருந்திரள் கண்டன கூட்டத்தில் விழுப்புரம் பகுதியிலிருந்து 60க்கும் அதிகமான தோழியர்கள் உள்ளிட்ட தோழர்களைப் பங்கேற்க வைத்த விழுப்புரம் பகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டதோடு அடுத்து நம் அனைத்து இந்திய சங்கம் திட்டமிட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் பற்றியும் கேரளா மாநிலம் கொச்சி எர்ணாகுளத்தில். வரும் நவம்பர் 8,9 தேதிகளில் நடக்க உள்ள நம் நலச்சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஏற்பாடுகள், அந்த மாநாட்டிற்கு ஒவ்வொரு உறுப்பினரும் தலா ரூ.100/- நன்கொடையாக அவசியம் வழங்க வேண்டும்‌ என்றும் அதுபோல் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள மாநில சங்கத்தின் மாநாடு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

STR  பகுதியிலிருந்து பணி ஓய்வு பெற்ற தோழர்.சக்கரவர்த்தி நம் சங்கத்தின் ஆயுள் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்

 இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு சித்த மருத்துவ முறையில் நாம் கைக்கொள்ள வேண்டிய வைத்திய முறைகளை எடுத்துரைத்த டாக்டர் ராகுல் ராஜ், கைத்தறி ஆடை அணிவித்து கௌரவப் படுத்தப்பட்டார்.

இன்றைய கூட்டத்தில் 15 தோழியர்கள் உள்ளிட்ட 100க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட சங்க

நிர்வாகி தோழர் பாஸ்கர் நன்றி கூறிட கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment