ஏறத்தாழ 400 தோழர்கள் கலந்து கொண்டது பிரச்சனையின் தாக்கத்தை அனைவரும் உணர்ந்துள்ளதை காட்டியது.
தோழர்கள் T.புருஷோத்தமன் TNGPA, தோழர் P.ஜெயராமன் AGS,AIBSNLPWA இருவரும் மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் முன்னிலை வகித்தனர்.
தோழர் ஜெயராமன் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கூறினார்.
தோழர் புருஷோத்தமன் அவர்கள் இன்று மத்திய அரசு ஓய்வூதியர்கள் மீது தொடுக்கப்படும் அநீதிகள் நாளை மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டிய நிலைமையை எடுத்துக் கூறினார்.
முதற்கண் தோழர் R ஸ்ரீதர் சம்மேளன செயலாளர் NFTE_BSNL அவர்கள் கண்டன உரையாற்றினார். ஓய்வூதிய வரைமுறை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் அது ராஜ்ய சபாவில் ஒப்புதல் பெறவேண்டிய தேவை இல்லை என்பதையும், பல்வேறு பொதுத் துறைகள் மாநில அரசு பொதுத் துறைகள் போன்றவற்றில் உள்ள ஓய்வூதிய முரண்பாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டினார். நம் பிரச்சினைகளுக்கு போராடுவதை தவிர வேறு வழி இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். நமது மாவட்ட தலைவர் தோழர் சாந்தகுமார் அவர்கள் மூத்த குடிமக்களாகிய ஓய்வூதியர்களுக்கு இருந்த பல சலுகைகளை ஆளுகின்ற அரசு பரித்ததையும், ஆளுகின்ற மத்திய அரசு நியமித்த பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளையும் உதாசீனப்படுத்தியதை தெளிவாக எடுத்துரைத்தார். எட்டாவது ஊதியக்குழு அமைவதற்கு ஆணை வெளியிட்டாலும் ஆனால் அதற்கான எந்த பணியும் தொடங்காமல் இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை புறம் தள்ளி ஊதிய மாற்றம் வந்தாலும் ஓய்வூதிய மாற்றம் கிடைக்காது என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளதை கண்டித்தார்.
மற்றும் இன்சூரன்ஸ்,BSNLEU,AIBDPA, போஸ்டல், வங்கிகள்,மாநில அரசை சேர்ந்த பல்வேறு ஓய்வூதியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
திரளாக வந்து போராட்டத்தை வெற்றி பெற செய்த பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த தோழர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.
இந்த போராட்டத்திற்கான ஆயத்தங்களை செய்த தோழர்கள் N.அன்பழகன், E விநாயகமூர்த்தி, R .நந்தகுமார், S.ராஜேந்திரன், P.சிவக்குமரன், N.ஜெயராமன், A.விஸ்வநாதன் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
மாவட்டச் செயலாளருடன் இணைந்து செயல்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment