Monday, 9 September 2024

 திண்டிவனம் பகுதி மாதாந்திர கூட்டம் 10-09-2024 

மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர் K. புண்ணிய கோட்டி TT தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  

ஒருங்கிணைப்பாளர் தோழர் D. திருவிக்கிரமன் வரவேற்புரையாற்றினார். மூத்த தோழர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் S. நாராயணசாமி அவர்கள் எதிர்கால பிரச்சனைகள் பற்றியும், அடுத்த கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து ஒரு கணிசமான தொகையை இருப்பு வைத்து செலவினங்களை செய்து கொள்வது பற்றியும் நமது சங்கத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பல முன்னணி தோழர்கள் AIBSNLPWA சங்கத்தில் சேர்ந்துள்ளார்கள் என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

முன்னணி தோழர் S நடராஜன் அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகளையும் சொசைடியின் நம்பிக்கை இல்லா பாங்கினையும் எடுத்துரைத்தார். 

தோழர் J தர்மலிங்கம் அவர்கள் சங்கத்தின் தோழர்களின் மனித நேயமிக்க பணியினை பாராட்டி புகழ்ந்து பேசினார் .

மாவட்ட உதவி செயலாளர் Y ஹாருன்பாஷா அவர்கள் சாம்பனின் செயல்பாடுகளையும் profie Data வின் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக சிறப்பு பேச்சாளர் நமது சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் தோழர் N.அன்பழகன் அவர்கள் நமது பகுதி தோழர்கள் P.வினாயகம், ஹாரூன் பாஷா JE ஆகியயோரின் சேவைகளை பாராட்டினார். ஏழாவது ஊதிய குழுவின் நீதிமன்ற செயல்பாடுகளையும் நமது சங்கம் கையாண்ட அணுகுமுறைனையும் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கனை கண்டித்தும் சொசைட்டியின் சங்க தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் சாத்தியம் என்பதையும் ஓம்புட்ஸ்மேன் கடிதத்தின் விளக்கத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

51வது திருமண நாளை முன்னிட்டு தோழர் S, நாராயணசாமி அவர்கள் திண்டிவனம் பகுதிக்கு சங்க வளர்ச்சி நிதியாக ரூ 1500 வழங்கினார்.

தோழர் G. பரமசிவம் நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவுற்றது. அனைத்து தோழர் தோழியர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.









 

No comments:

Post a Comment