விருத்தாசலம் பகுதி மாதாந்திர கூட்டம்
8.9.2024 விருதை பகுதி ஓய்வூதியர் நலச் சங்க மாதாந்திர கூட்டம் பகுதி தலைவர். M.ஞானசேகரன் தலைமையில், பகுதி செயலர் R. ராமலிங்கம் வரவேற்புரையடன் நடைபெற்றது.
புதிய உறுப்பினராக இணைந்துள்ள தோழர்.PMKD. பகத்சிங், அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். கடலூர் மாவட்ட மாநாட்டில் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள். L.ஜகந்நாதன், திட்டக்குடி. நல்லதம்பி, இருவரும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். தோழர்கள் லாரன்ஸ், பெண்ணாடம் சுப்பிரமணியன், உ.பேட்டை பாண்டுரங்கன் போன்ற தோழர்களின் கேள்விகளுக்கு மாவட்ட தலைவர், பகுதி செயலர் இருவரும் பதிலளித்தனர்.
இறுதியாக மாவட்ட தலைவர். திரு.சந்திரமோகன்,அவர்கள் இன்றைய பென்ஷன் ரிவிஷன், லைப்சர்ட்டிபிகேட்,CGHS பயன்பாடு, ஆதார்புதுப்பித்தல், சென்னை சொசைட்டி நிலுவைத்தொகை,78.2% திரும்ப பெறுவது, தோழர். லட்சுமணன் மருத்துவ சிகிச்சை பணப்பலன் திரும்ப பெறுவது, மெடிக்கல் அலவன்ஸ், fma போன்ற அம்சங்களை மிகவும் தெள்ளத்தெளிவாக தனது ஒன்னரை மணி நேரத்தில் எடுத்துரைத்து உறுப்பினர்களின் ஐயங்களை களைந்தார்.
இறுதியாக தோழர். கு. கலைமணி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment