AIBSNLPWA திண்டிவனம் கிளையின் மாதந்திர
ஓய்வூதியர் கூட்டம்
மற்றும் நமது சங்கத்தின்
அமைப்புதினம் 10-08-2023 வியாழன் அன்று காலை
11 மணி அளவில், திண்டிவனம் தொலைபேசி நிலைய வளாகத்தில் திண்டிவனம் பகுதி தலைவர் திரு.R..ராஜேந்திரன்
STS அவர்களின் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர்
திரு .S.நாரயணசாமி அவர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் D.திருவிக்கிரமன்
அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் திரு Y.ஹாருன்பாஷா
அவர்கள் CGHS இன் முக்கியத்துவம் பற்றி பேசியதுடன், இதுவரை சேராதவர்கள் ,உடனடியாக
சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திரு.S.நடராசன் Sde நமது சங்கத்தின் சாதனைகள் பற்றியும் விரிவாக பேசினார்.
திரு.நாரயணசாமி அவர்கள் கூடுதலாக பங்கேற்ற
உறுப்பினர்களை இதேபோல், அடுத்த கூட்டத்தில் இன்னும் கூடுதலாக பங்கு பெறவேண்டும் என்றும்
வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்ட தலைவர் தோழர் சந்திரமோகன் அவர்கள் ஏழாவது
சம்பள கமிஷன் நீதிமன்றத்தில் இரண்டு வருடமாக காலதாமதம் ஆகிவிட்டதையும் மீண்டும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதை பற்றியும் ஊழியர்கள்
உடல் நலத்தை பேணுவதை பற்றியும் மருத்துவ ஆலோசனைகளையும்
ஆன்மீக ஆலோசனைகளையும் மற்றும் நமது கிளையின் தன்னார்வர்களான துடிப்புமிக்க தோழர்கள்
P வினாயகம் Y.ஹாருன் பாஷா ஆகியோரின் பணி மிகவும் சிறப்பாக இருந்தது என்று பேசினார்.
அகில இந்திய துணைச்செயலர்
தோழர் ஜெயராமன் ”ஏழாவது சம்பள கமிஷனின் நிலுவைத்
தொகையினை பற்றியும் நீதிமன்ற வழக்கைப் பற்றியும் ஒவ்வொரு உறுப்பினர்களின் குறைகளை கேட்டறிந்து
விவரமாக எடுத்துரைத்தார்”.







No comments:
Post a Comment