சிதம்பரம் மாதாந்திர கூட்டம் 16.7.23
காலை
10 மணிக்கு சிதம்பரம் தெற்கு சன்னதி தொலைபேசி நிலையத்தில் 65 உறுப்பினர்களுடன் தொடங்கியது கூட்டத்திற்கு பகுதி தலைவர் தோழர் விஸ்வலிங்கம் தலைமை ஏற்றார்.
சிதம்பரம்
பகுதி தோழர் குருமூர்த்தி, மாவட்ட
அமைப்பு செயலாளர் தோழர் ஹெச் இஸ்மாயில் மரக்காயர், ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜி எஸ் குமார்,
மாவட்டச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் லோகநாதன்,
தோழர் இளங்கோவன், மாவட்ட
உதவி செயலாளர் தோழர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் தோழர் சந்திரமோகன்,
மாவட்ட செயற்குழு
உறுப்பினர் தோழியர் ராஜகுமாரி
தமிழ்மணி, சிதம்பரம் பகுதி கீதா ஜவகர் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக
அகில இந்திய துணை பொதுச்செயலாளர் திரு பி ஜெயராமன் அவர்கள்
தனது சிறப்புரையில் ஓய்வூதியர் மாற்றம் என்பது விரைவில்
முடிவுக்கு வர உள்ளதாக மிகுந்த
கரகோஷத்திற்கிடையே தெரிவித்தார். குடும்ப ஓய்வுதியர்கள் அதிக அளவில் இந்த பகுதியில் கலந்து கொள்வது தமக்கு மகிழ்வளிப்பதாகவும் அவர்கள் கணவர்கள் பெரும்பாலோர் தமக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
தோழர்
எஸ்
ரவிச்சந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.
மாவட்டச்
சங்கம்
No comments:
Post a Comment