திண்டிவனம் மாதந்திர
ஓய்வூதியர் கூட்டம்
10-07-2023 திங்கள் அன்று காலை 11 மணி அளவில், திண்டிவனம் தொலைபேசி நிலையவளாகத்தில் திண்டிவனம் பகுதி தலைவர் திரு.R..ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் தோழர் நாராயணசாமி அவர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது. கிளைத்தலைவர் தமது உரையில் நமது பென்ஷன் ரிவிஷன் தற்போதைய நிலை குறித்தும், அதை விரைவில் நாம் வெற்றிகரமாக வென்றெடுக்க நமது மாவட்ட சங்கம், மாநில சங்கம், மத்திய சங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் அனைவரும் தவறாமல் ஒத்துழைப்பு நல்கிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உறுப்பினர்கள்களின் பிரச்சனை களை தீர்க்க சென்னை CCA அலுவலகத்தில் நேரில் சென்று உதவும் திண்டிவனம் H.ஹாருன்பாஷா அவர்கட்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
தோழர் H.ஹாருன்பாஷா அவர்கள் CGHSன் முக்கியத்துவம் பற்றி பேசியதுடன், இதுவரை சேராதவர்கள், உடனடியாக சேர்ந்து பயன்பெற கேட்டுக்கொண்டார்.
திரு.S.நடராசன் நமது சொசைட்டி நிலுவைத்தொகையை பெற்றுதர நமது மாவட்ட செயலர் அவர்கட்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரு.விநாயகம அவர்கள் அஞ்சலகத்தில் இருந்து சம்பானுக்கு மாறியுள்ள 47 பேரும் குருஞ் செய்தி வந்தவுடன் தன்னை தொடர்பு கொண்டால் உடனடியாக உதவிட தயாராக இருப்பதாக கூறினார்.
திரு.புண்ணியகோட்டி அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.


No comments:
Post a Comment