Sunday, 9 July 2023

 கடலூர் பகுதி 

மாதாந்திர கூட்டம் 

08.07.2023 மாலை 3:30 மணி அளவில் கடலூர் பகுதியின் மாதாந்திர கூட்டம் தோழர் B.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திரளான  உறுப்பினர்கள் பங்கேற்றனர். வரவேற்புரை மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின்னர் உறுப்பினர் மூத்த உறுப்பினர்கள் தோழர் கடல் நாகராஜன்,  தோழியர் ராஜேஸ்வரி, தோழர் வேலாயுதம் ஆகியோர் பேசினார்கள்.

 தோழியர்.ராஜேஸ்வரி அவர்கள் ஒரு இணையதள போட்டியில் பங்கு பெற்று தான் கோப்பை வென்றது பற்றிய நிகழ்வினை பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். 

   தோழர் கடல் நாகராஜன் அவர்கள் பொதுவான நிகழ்வுகளில் பங்குபெற வேண்டிய அவசியத்தை அவருக்கே உரித்தான பாணியில் அனைவரையும் கவரும்படி எடுத்துரைத்தார். மேலும் CGHS பற்றிய சில சந்தேகங்களைக் கூறி அவற்றுக்கான விளக்கத்தை தலைவர்களிடம் வேண்டினார். 

 மாவட்ட செயலாளர் தோழர். R.அசோகன் மாவட்ட தலைவர் தோழர். K.சந்திரமோகன் அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர்.P.ஜெயராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். CGHS பற்றிய உறுப்பினர்களின் சந்தேகங்கள், FMA, பென்ஷன் ரிவிஷன் பற்றிய தற்போதைய நிலைமை,  குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகள் ஆகியவை பற்றி விளக்கப்பட்டது. 

மாவட்டத்தலைவர் தோழர் K.சந்திரமோகன் அவர்கள் உடல்நலம் சார்ந்த சில குறிப்புகளை அனைவரும் பயன்பெறுமாறு எடுத்துரைத்தார்.

 தோழர்.E.விநாயகமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.






No comments:

Post a Comment