பென்சனர் அதாலத்- சிதம்பரம்
11.08.2023
அன்று சிதம்பரம் சாரதா ஓட்டலில் கடலூர் Business area, புதுச்சேரி Business area ஆகிய
பகுதிகளுக்கான ஓய்வூதியர் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.
முதலில்
எண்பது வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள் தோழர்கள் K.சுப்ரமணியன், Kமுருகன், G.பார்த்தசாரதி
ஆகியவர்கள் CCATN நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டனர். திருமதி வந்தனா குப்தா Pr.CCA அவர்கள் மும்பையில் இருந்து வந்து இந்த கூட்டத்தில்
கலந்து கொண்டார். அனைவரது கருத்துக்களையும் நிதானமாக கேட்டு அதற்குரிய பதில்களையும்
தெளிவாக எடுத்துரைத்து கூட்டத்திற்கு சிறப்பு செய்தார். CCATN அலுவலகம் செய்து வரும்
பல்வேறு பணிகளை பட்டியலிட்டு ஓய்வூதியர்களும் தங்களது ஒத்துழைப்பை நல்கி பிரச்சனைகள்
தீர ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். பல பிரச்சினைகளுக்கு கூட்டத்திலேயே தீர்வு
கொடுத்தார். இதுவரையில் நடைபெற்ற ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டங்களில் இந்தக் கூட்டம்
வேறுபட்டு நின்று சுமூகமாக நடைபெற்று ஓய்வூதியர்களும் ஓய்வூதியர் சங்கங்களின் பிரதிநிதிகளும்
தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைக்க நீண்ட அவகாசம் கொடுத்து குறைகளை கேட்டது பாராட்டுக்குரிய
விஷயமாகும்.
நமது
மாவட்ட சங்கத்தின் சார்பாக 3 பிரச்சனைகளை இந்த கூட்டத்தில் முன் வைத்தோம்.
திருமதி
நித்திலவல்லி அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார்கள்.
தோழர்
K.மனோகரன் STS/NTS அவர்களது NEPP உத்தரவு பணி ஓய்வு பெற்று நான்கு மாதங்களுக்கு பிறகு
வெளியிடப்பட்டு சம்பளம் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் சம்பளம் மாற்றம் பற்றிய தகவல்கள்
CCATN அலுவலகத்திற்கு செல்லாத காரணத்தால் அவருக்கு ஓய்வூதிய மாற்றம் செய்யப்படவில்லை.
தோழர் அவர்களும் ஆறு வருடங்கள் கழித்து மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பணி குறிப்பேடு புத்தகம் CCATN அலுவலகத்தில் இருப்பதாலும் அதனை அனுப்பி வைப்பதற்கு
காலம் தாமதம் ஆவதை சுட்டி காட்டினோம். சம்பளம் மாற்ற உத்தரவையும், Form-7 படிவத்தையும்
அனுப்பி வைத்தால் ஓய்வூதியம் மாற்றம் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். கடலூர் பிஎஸ்என்எல்
நிர்வாகம் அதனை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தது.
குமாரி.பத்மப்பிரியா
அவர்களுக்கு பிஎஸ்என்எல் நிர்வாகத்திடம் இருந்து
field report வந்தவுடன் அவருக்கு reauthorization of family pension உத்தரவு
வெளியிடுவதற்கு அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்தையும் கூறியுள்ளார்கள்.
விரைவில் field report விரைவில் அனுப்பி வைக்கப்படும்
என்று கணக்கு அதிகாரி உறுதிமொழி கொடுத்துள்ளார். இவருடைய பிரச்சனையும் தீர்வதற்கு வாய்ப்பு
உள்ளது.
கடலூர்
மாவட்ட சங்கத்தின் சார்பாக கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரையும் பொன்னாடை
அணிவித்து கௌரவித்தோம். இந்த கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் தோழர் N.திருஞானம்,
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் K.சந்திரமோகன் மாவட்டத் தலைவர், தோழர் A.ஜெயக்குமார்
மாவட்ட உதவி செயலாளர் தோழர். P.சாந்தகுமார்,
மாவட்ட உதவி செயலாளர், தோழர் G S குமார் சிதம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர்,
தோழர். T .விஸ்வலிங்கம சிதம்பரம் பகுதி தலைவர் தோழர் .G கணேசன் விழுப்புரம் பகுதி ஒருங்கிணைப்பாளர்
ஆகியோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
ஆகஸ்ட் 10,11தேதிகளில் வாழ்நாள் சான்றிதழ் மேளா போன்ற பணிகளில் CCATN அலுவலகத்துடன்
ஒருங்கிணைந்து செயல்பட்ட சிதம்பரம் பகுதி தோழர்களுக்கு நன்றி. மேடையில் அமர்ந்திருந்த
அனைத்து அதிகாரிகளும் பெண்களாக இருந்தது இந்திய நாட்டில் பெண்களின் முன்னேற்றமும் அவர்கள்
நாட்டிற்கு அளிக்கும் அர்ப்பணிப்பும் வெளிச்சம் போட்டு காட்டியது. இதேபோல் மற்ற இடங்களில்
நடைபெற உள்ள ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டஙகளும் ஓய்வூதியர்களுக்கு பயனுள்ளதாக அமைய
CCATN அலுவலகத்திற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்கிறோம். CCATN அலுவலகத்திற்கு கூடுதலாக அதிகாரிகளையும் ஊழியர்களையும்
அமர்த்துவதற்கு Pr.CCATN அவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். அவர் அனைத்து ஓய்வூதியர்களும்
சம்பானில் உள்ள அனைத்து குறை நிறைகளையும் சரி செய்வதற்கு KYP படிவத்தை CCATN அலுவலகத்தில்
சமர்ப்பிக்கும் படி வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் நிழற்பட காட்சிகளை
மேலே பதிவிட்டுள்ளோம்.
R அசோகன்
மாவட்ட செயலாளர்






No comments:
Post a Comment