விருத்தாசலம் பகுதி ஓய்வூதியர்கள் கூட்டம்
13.8.2023 ஞாயிறு மாலை நான்கு
மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் விருத்தாசலம்
பகுதியின் 15வது மாதாந்திர கூட்டம் உதவி தலைவர் தோழர்.M.ராஜலிங்கம் தலைமையில் கூடியது.
பகுதிச்செயலாளர் தோழர்
ராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். அதன் பின் மணிப்பூர் கலவரத்தில் இறந்த மக்களுக்கு
ஒரு நிமிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துஅஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்பு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கினர்.இதில் தோழர்கள் விருதை அன்பழகன், மோகன்ராஜ், கலைமணி, திருஞானம், பெண்ணாடம்
சுப்பிரமணியன், கணபதி, திட்டக்குடி முருகன்,
உளுந்தூர்பேட்டை, ஜெகநாதன், நசீர்பாஷா மற்றும் பல உறுப்பினர்களின் வினாக்களுக்கு
அகில இந்திய துணைச் செயலர் தோழர். பா.ஜெயராமன் அவர்கள் தெளிவாக விளக்கமளித்தார். இதில்
சென்னை சொசைட்டியின் நிலுவைத் தொகை, Cghs பயன்பாடு, பென்ஷன் ரிவிஷன் ,லைப் சர்ட்டிபிகேட்
புதுப்பித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றன. கூட்டத்தில்30க்கும் மேற்பட்ட
தோழர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக தோழர்.மோகன்ராஜ் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவுற்றது.




No comments:
Post a Comment