Sunday, 27 August 2023

 மாதாந்திர கூட்டம்-சிதம்பரம்

27.8.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிதம்பரம் தெற்கு சன்னதி தொலைபேசி நிலைய வளாகத்தில் நமது மாதாந்திர கூட்டம் தொடங்கியது கூட்டத்திற்கு திரு விஸ்வலிங்கம் பகுதி தலைவர் தலைமையேற்க கூட்டம் தொடங்கியது கூட்டத்திற்கு  மகளிர் 20 பேர் உள்ளிட்ட  88 பேர் கலந்து கொண்ட கூட்டம் மிகச் சிறப்பாக தொடங்கியது

வரவேற்புரை மற்றும் வாழ்த்துரையை மாநிலத் துணைத் தலைவர் திரு என் திருஞானம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

திரு.பி.ஜெயராமன் AGS அவர்கள் சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில் சம்ப்பான் பற்றி அதில் நாம் பார்க்க வேண்டிய பகுதிகள்,ஓய்வூதிய விபரம் என விரிவாக எடுத்து கூறினார். CGHS முக்கியத்துவம் குறித்து கூறினார். ஓய்வூதிய மாற்றம் குறித்த விசாரணை தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. அதற்காக நமது சங்கம் ஆற்றியுள்ள பணிகளையும் தலைவர்களையும் குறிப்பிட்டார்.





No comments:

Post a Comment