அமைப்பு தின சிறப்பு கூட்டம் 26/08/2023
தோழர்களே! தோழியர்களே!
அனைவருக்கும் வணக்கம்.
பல வண்ண பூக்களை
கொண்டு உருவாக்கிய ஒரு அழகிய மாலையைப் போல் தோழர்கள் S.நாராயணசாமி திண்டிவனம், A.ஜெயக்குமார்
சிதம்பரம், மாநில துணைத்தலைவர் N.திருஞானம், N அன்பழகன் கடலூர், V.லோகநாதன் நெய்வேலி,
S.மணி கள்ளக்குறிச்சி, P.கலிவரதன் விழுப்புரம், L.ஜெகநாதன் உளுந்தூர்பேட்டை, P.சாந்தகுமார்
கடலூர் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை வாழ்த்துரையோடு வழங்கினார்கள்.
பின்னர் அகவை
80 அடைந்த தோழர்கள் கடல் நாகராஜன் கடலூர், R.பெரியசாமி கடலூர், G.பார்த்தசாரதி சிதம்பரம்,
K.N.ராமகிருஷ்ணன் சிதம்பரம், K.வெங்கட்ரமணன் கடலூர் ஆகியோர்களுக்கு அகில இந்திய சங்கத்தின்
உதவி பொருளாளர் தோழியர் V.லதா அவர்கள் அனைவருக்கும் கிரீடம் சூட, அகில இந்திய உதவிப்
பொதுச்செயலாளர் தோழர் P.ஜெயராமன் அவர்கள் பொன்னாடை போர்த்திட, மாநில துணைத்தலைவர் தோழர்
N.திருஞானம் சந்தன மாலை அணிவித்து கௌரவித்தனர்.
தோழர் P.ஜெயராமன்
அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் அவர்கள் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம்
பெற்றால் தான் திரு.நகரா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் பெற்ற one rank one pension என்கின்ற தீர்ப்பின்
பலனை பெற முடியும் என்றும், ஒரு பதவியில் பணிபுரிந்து
பல கட்டங்களில் ஓய்வு பெற்ற அனைவருக்கும் சமமான ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்புள்ளதையும்
சுட்டி காட்டினார். நமது சங்கத் தலைவர்கள் பல்வேறு அதிகாரிகளையும் பலமுறை சந்தித்தும்
நமது துறை அமைச்சரை பலமுறை சந்தித்தும் பலன் கிட்டாத பட்சத்தில்தான் நீதிமன்றத்தை அணுக
முயற்சித்தார்கள். நமது சங்கம் சரியான திசை வழியில் பயணிப்பதை பல்வேறு தரவுகள் மூலம்
சுட்டி காட்டினார். நமது ஓய்வூதிய மாற்றம் பெறுவதற்கான முயற்சி இறுதி கட்டத்தை நெருங்கி
உள்ளதை விளக்கினார். பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும், பல்வேறு துறைகளில் அரசுத்துறை
பொதுத்துறையாக மாறிய பொழுது அவர்கள் மத்திய அரசு நியமித்த ஊதியக்குழு பரிந்துரையின்
படி ஓய்வூதியம் பெற்றதையும் இன்னும் பல தகவல்களையும் ஏறத்தாழ 300 பக்க அளவிலான நமது
சங்கத் தலைவர்கள் அளித்த தரவுகளின் படி நம்முடைய வழக்கறிஞர் சிறப்பாக வாதாடியதையும்
எடுத்துரைத்தார். CGHS சேர்வதினால் கிடைக்கும் பலன்களையும் பட்டியலிட்டார்.
இறுதியாக மாவட்ட
பொருளாளர் S.ஹாஜா கமாலுதீன் அவர்கள் நன்றி கூறினார். குறித்த நேரத்தில் அமைப்பு தின
சிறப்பு கூட்டத்தை முடிப்பதற்கு ஒத்துழைத்த
அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
👉👉நிகழ்வின் அனைத்து புகைப்படங்கள் காண 👈👈
R அசோகன்
மாவட்ட செயலாளர்
AIBSNLPWA CUDDALORE.





No comments:
Post a Comment