Monday, 12 June 2023

விருத்தாசலம் பகுதி 

ஓய்வூதியர்கள் கூட்டம்

தலைவர் M.ராஜலிங்கம், தலைமையில்  11.6.2023 மாலை ஐந்து மணி அளவில்  விருத்தாசலம் தொலைபேசி நிலையத்தில் துவங்கியது.

விருத்தாசலம் பகுதிச்செயலர் ரா. ராமலிங்கம் வரவேற்புரைக்குப் பின் ஒரிசா ரயில் விபத்தில் பலியானோர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அங்கத்தினர்கள் கேட்ட வினாக்களுக்கு மாவட்ட தலைவர் திரு சந்திரமோகன் விரிவான விளக்கத்தை அளித்தார். தோழர்கள். விருதை  அன்பழகன், கனகராஜ் திட்டக்குடி நல்லதம்பி, முருகன், சுப்பிரமணியன்,  பெண்ணாடம் சுப்பிரமணியன், கணபதி மற்றும் பல தோழர்கள் மெடிக்கல் அலவன்ஸ்/மெடிக்கல் பில் பட்டுவாடா பிரச்சனைகள், வருமானவரி பிடித்தம், சென்னை சொசைட்டியிலிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை போன்ற பல்வேறு வினாக்களை எழுப்பினர். 

தொடர்ந்து மாவட்ட தலைவர் திரு. சந்திரமோகன், அவர்கள் வருமானவரி தாக்கல் அதன் நன்மை   CGHS ல் சேர்வதினால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கூறினார். அவ்வப்போது தோழர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். 

      அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தோழர் பா.ஜெயராமன்

அவர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கிடைக்க கூடிய பலன் கள் பற்றியும், உறுப்பினர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை பெறுவதற்கான இன்றைய சென்னை சொசைட்டியின் நிலை என்ன  என்பதை பற்றியும் விரிவாக விளக்கிக் கூறினார். 

இறுதியாக கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் அமைதி காத்து கூட்டம் சிறப்புற அமைய ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் திரு.K. கலைமணி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.






No comments:

Post a Comment