திண்டிவனம் கிளையின் மாதந்திர ஓய்வூதியர் கூட்டம்
10-06-2023 சனிக்கிழமை காலை 11 மணி அளவில், தொலைபேசி நிலைய வளாகத்தில் பகுதி தலைவர் திரு.R..ராஜேந்திரன் STS அவர்களின் தலைமையில் நடைபெற்றது,மாவட்ட துணைத்தலைவர் திரு .S.நாரயணசாமி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட 30க்கும் மேற்ப்பட்ட ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவரையும் வரவேற்று, வரவேற்புரை நிகழ்த்தினார்.தலைவர் ராஜேந்திரன் அவர்கள் துவக்க உரையாற்றினார்.நமது மாவட்ட சங்கத்திற்கு மிக உறுதுணயாக விளங்கும் திரு.H.ஹாருன்பாஷா J.E அவர்கள் அனைவரும் தவறாமல் மாதாமாதம் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்.தோழர் S.நடராஜன் SDE அவர்கள் பலவகையில் சங்க செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் திரு.H.ஹாருன்பாஷா அவர்களை பாராட்டி பேசினார்.தோழர்.J.தருமலிங்கம் SDE அவர்கள் சொசைட்டி நிலுவை கிடைக்க நமது சங்கம் எடுக்கும் நிலைபாடு குறித்து கடலூர் மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் திரு.N .அன்பழகன் அவர்களை கேட்டுக்கொண்டார்.நமது பகுதி தலைவர் திரு.R.ராஜேந்திரன் அவர்கள் மாவட்ட சங்க சிறப்பு அழைப்பாளர் திரு.N.அன்பழகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர் தங்கவேல் அவர்களுக்கும் கதராடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். திரு.தங்கவேல் அவர்கள் கூட்டத்தில் இவ்வளவு உறுப்பினர்கள் கலந்துகொள்வது குறித்து மிகவும் நெகிழ்ந்து பேசினார் திரு.விநாயகம் அவர்கள் ஒவ்வொரு குடும் ஓய்வூதியர்களையும் நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு குறிப்பெடுத்து அதை மாவட்ட சங்க செயலர் திரு.R.அசோகன் அவர்கள் மூலம் நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.பின்னர் நமது சிறப்பு அழைப்பாளர் திரு.N.அன்பழகன் அவர்கள் பேசத்தொடங்கினார்.நமது மாவட்ட சங்கம் நமது ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்காகவும் நேரம், காலம் பார்க்காமல் தங்களை அர்ப்பணித்து வரும் நமது அகில இந்திய உதவி செயலர் திரு.P.J,மற்றும் மாவட்ட செயலர் திரு.R.அசோகன், ஓய்வூதியர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து கடைமையாற்றும் நமது கடலூர் தோழர்கள் செயல்பாடுகள் குறித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பேசினார்.நமது பென்ஷன் ரிவிசன் தற்போதைய நிலை ,வாழ்நாள் சான்றிதழ் கொடுப்பதின் அவசியம், நமது மாவட்ட சங்கத்திற்கு நாம் தரவேண்டிய ஒத்துழைப்பு, FMA,சொசைட்டி நிலுவை பெற நமது தலமையின் வழிகாட்டுதல் பற்றி மிக,மிக சிறப்பாக குறிப்பெடுத்து பேசியதுடன் அனைவர் கேட்கும் சந்தேகங்களும் விளக்கம் அளித்தார்.கூட்டத்தை மிக மிக சிறப்பாக ஒருங்கிணைப்பாளர் திரு.திருவிக்ரமன் அவர்கள் ஏற்ப்பாடு செய்திருந்தார். திருமதி.K.ராதா குடும்ப ஓய்வூதியர் அவர்கள் கூட்ட தேநீர் செலவிற்காக ரூ,500 வழங்கினார். பிஸ்கட் தேனீர் விருந்துடன் திரு.வெங்கடேசன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.


No comments:
Post a Comment