Sunday, 11 June 2023

 கடலூர் பகுதி மாதாந்திரக்கூட்டம் – 10.6.2023

கடலூர் பகுதி மாதாந்திரக்கூட்டம் 10.6.2023 மாலை 3.00 மணியளவில் கடலூர் சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் B.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் இளங்கோவன் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் மறைந்த தோழர்கள் மற்றும் ரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.


 மாவட்டத் தலைவர் C.சந்திரமோகன், மாவட்டச் செயலர் தோழர் R.அசோகன், மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர் N.அன்பழகன், அகில இந்திய துணைச் செயலர் தோழர் P.ஜெயராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


பென்சன் பத்திரிக்காவில் ஆங்கிலத்தில் வெளியான குடும்ப ஓய்வூதியர் பற்றிய செய்தியை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழில் மொழிபெயர்த்து அதனை புத்தக வடிவில் வெளியிட உதவிய தலைவர் தோழர் கந்தசாமி அவர்கள் கவுரவிக்கப்பட்டார்.


குடும்ப உறுப்பினர் திருமதி சரோஜா கதிர்வேலு அவர்கள் உறுப்பினராக நமது சங்கத்தில் இணைந்துள்ளார். அவருக்கு நமது தோழியர் V.விஜயலட்சுமி அவர்கள் துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார்.


 தோழியர் V.விஜயலட்சுமி பால்கி தங்களது திருமண நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார், தோழர் M.L.ஞானசேகரன் அவர்கள் காரம், தேநீர் வழங்கி சிறப்பு செய்தனர், தோழியர் A.வசந்தா அவர்கள் தனது 60 வயது பூர்த்தி அடைந்ததனை கொண்டாடும் வகையில் மாவட்டம், பகுதி சங்கத்திற்கு தலா ரூ500/ம், பகுதி கூட்ட செலவிற்காக ரூ1500/- நன்கொடையாக வழங்கி சிறப்பு செய்தார்.


கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தோழர்கள், தோழியர்கள் பெரும்பான்மையாக கலந்துகொண்டது சிறப்பாகும். தோழர் நந்தகுமார் நன்றி கூறிட கூட்டம் முடிவுற்றது.




No comments:

Post a Comment