Saturday, 20 May 2023

 சிறப்பு கூட்டம்-விழுப்புரம்

என்.எஸ்.பாண்டுரங்கன் அவர்களின் .100.வது ஆண்டு பிறந்தநாள் விழா, மே தினம்- தொழிலாளர் தின விழா, விழுப்புரம் பகுதி மாதாந்திர கூட்டம் மிகச் சிறப்புடன் உணர்ச்சிவசமாக முப்பெரும் விழாவாக ஹோட்டல் கணபதி கான்பிரன்ஸ் ஹாலில் தோழர் ஜி வேதாச்சலம் துணைத் தலைவர் அவர்கள் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது. என் எஸ் பி அவர்களின் திரு உருவப்படத்திற்கு தோழர்கள், தலைவர்கள், உறவினர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

வரவேற்புரை தோழர் ஜி கணேசன் பகுதி செயலாளர் ஆற்றிட, தோழர் ஆர்.அசோகன் மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, மாநில துணைத்தலைவர் தோழர் என் திருஞானம். அவர்கள் முத்தாய்ப்பாக சிறப்புரை வழங்கினார். தொழிற்சங்க மூத்த தோழர்  கே வீராசாமி அவர்கள் என் எஸ் பாண்டுரங்கன் அவர்களின் சங்கப் பணியினை அனைத்து தோழர்களுக்கும் புரியும் வண்ணம் குறிப்பாக தலைவர் ஜெகன் போன்ற தலைவர்கள் உடன் சங்க பணி மற்றும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மாவட்ட தலைவர் தோழர் கே சந்திரமோகன் முன்னாள் மாவட்ட செயலர் தோழர் இளங்கோவன், மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர் பி. சாந்தகுமார், தோழர் ஏ ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் D.ஷண்முகசுந்தரம் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்கள். அகில இந்திய துணை பொதுச்செயலாளர் தோழர் பா.ஜெயராமன் அவர்கள் உறுப்பினர்கள் மனதிற்கு மருந்தாகவும் செவிக்கு விருந்தாகவும் என் எஸ் பி தந்தை அவர்களின் நினைவு கூர்ந்து அவரைப் போற்றும் விதமாகவும் சங்க செயல்பாடு, அகில இந்திய செயல்பாடு குறித்து மிக அருமையாகவும் சிறப்புரை ஆற்றினார். அகில இந்திய துணைத் தலைவர் தோழர் கே முத்தியாலு அவர்கள் உறுப்பினர்கள் செவிமடுத்து கேட்கும் விதமாக மூன்றாவது ஊதிய குழு பெஞ்சன் மாற்றம் நிலை என்.எஸ்.பாண்டுரங்கனின் நினைவுகளை பாராட்டியும் மிக அருமையாக சிறப்புரையாற்றினார். மேலும் எஸ் சண்முகம், எஸ் மோகன் குமார் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களை மாவட்டச் சங்கம் வரவேற்கிறது.  மேலும் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் பா.ஜெயராமன் அவர்கள் கள்ளக்குறிச்சி தோழர்கள் பிள்ளைகளின் மாணவர் செல்வங்களுக்கு+2வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்து கூட்டத்திற்கு சிறப்பு சேர்த்தார். மேலும் ஏ ஆர் ராமமூர்த்தி ஆர் அகஸ்டின் பகுதி பொருளாளர்கள் நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவுற்றது,






No comments:

Post a Comment