கடலூர் பகுதி
மாதாந்திர கூட்டம்
கடலூர் பகுதி மாதாந்திர கூட்டம் இன்று 13.05.2023 மதியம் மூன்று மணியளவில் கடலூர் சங்க அலுவலக வளாகத்தில் பகுதி தலைவர் தோழர் B.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் V.இளங்கோவன் வரவேற்புரை ஆற்ற, தோழர் B.கந்தசாமி அவர்கள் அஞ்சலி உரையாற்றி கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் தோழர் N.திருஞானம் அவர்கள் மாவட்ட மாநில செயற்குழு செய்திகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் மாவட்ட செயற்குழுவில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் பகுதியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் தோழர் K.சந்திரமோகன், மாவட்ட உதவி செயலர் தோழர் P.சாந்தகுமார், மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர் N.அன்பழகன் ஆகியோர் கடலூர் பகுதியின் சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் தோழர் K.சந்திரமோகன், மாவட்ட செயலர் தோழர் R.அசோகன், அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் P.ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பகுதி பொருளாளர் தோழர் R.நந்தகுமார் நன்றி கூறிட கூட்டம் நிறைவு பெற்றது.



No comments:
Post a Comment