Friday, 12 May 2023

 திண்டிவனம் பகுதி  மாதாந்திர கூட்டம் 10.05.2023  

திண்டிவனம் பகுதி AIBSNLPWA சங்கத்தின்  மேமாத மாதாந்திர கூட்டம்   10/05/2023 அன்று திண்டிவனம் தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் J.தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இம்மாத கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய துணைப்பொது செயலர் தோழர் P.ஜெயராமன் அவர்களும், தமிழ் மாநில உதவி தலைவர்  தோழர் N.திருஞானம் அவர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். தோழர் ஜெயராமன் அவர்களின் தந்தையாரும், தொழிற்சங்கத்தலைவர் தோழர் NSP என்று அனைவராலும் அழைக்கப்படும் திரு.N.S.பாண்டுரங்கன் அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனம் பகுதி AIBSNLPWA சங்க வளர்ச்சிக்கு அவரது தந்தையாரின் நினைவாக ரூபாய் 10,000  நன்கொடையை பகுதி ஒருங்கினைப்பாளர் திரு D.திருவிக்கிரமன் அவர்களிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment