விழுப்புரம் பகுதி மாதாந்திர கூட்டம் - 02/04/2023
காலை 10 மணியளவில் 5 தோழியர்கள் உட்பட 70 தோழர்கள் கலந்துகொண்ட கூட்டத்திற்கு பகுதி தலைவர் G.ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை பகுதி ஒருங்கிணைப்பாளர் G.கணேசன். புதிய உறுப்பினராக இணைந்த தோழியர் K செல்வி அவர்களுக்கு அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் ஜெயராமன் அவர்கள் கதர் ஆடை போர்த்தி வரவேற்க, குடும்ப ஓய்வூதியர் கலைச்செல்வி மகாலிங்கம் அவர்களுக்கு மாநில உதவித்தலைவர் திருஞானம் கதர் ஆடை போர்த்தி கௌரவித்தார்.
D.சண்முகசுந்தரம்,V.பெருமாள், K.ஆறுமுகம், D.ராமலிங்கம், TNN முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ஜெயராமன் மாநில துணை தலைவர் தோழர் திருஞானம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.







No comments:
Post a Comment