Wednesday, 29 March 2023

  


தோழர். N.S.பாண்டுரங்கன் அவர்களின் நூற்றாண்டு விழா

முதுபெரும் தலைவரும் வீரமிக்க தொழிற்சங்கவாதியும் லைன் ஸ்டாப் மற்றும் குரூப்'C' சங்கங்களின் மாநில தலைவராகவும் பணியாற்றிய தோழர். N.S பாண்டுரங்கன் அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கி உள்ளது. எந்த அதிகாரிகளுக்கும் அஞ்சாமல் உறுப்பினர் நலனுக்காக போராடியதன் காரணமாக அவர் எட்டு முறை மாற்றலுக்கு உள்ளாக்கப்பட்டார். எத்தகைய அடக்குமுறைகள் ஏவப்பட்ட போதிலும் தளராது போராடிய வீரமிக்க தலைவர். நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவரும் அகில இந்திய உதவி பொதுச் செயலாளரின் தந்தையுமாவார். தந்தையும்,தனயனும் ஏறத்தாழ எண்பது வருட தொழிற்சங்கபணிகள் செய்து பல லைன் ஸ்டாப் தோழர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய உத்தமர்கள். இத்தகைய தோழர்களின் தொழிற்சங்கப் பணி என்பது அளவிடப்படாத ஒன்று. இத்தகைய போர்க்குணமிக்க தலைவர்களால் தான் இன்று வரையில் கடலூர் என்பது போராட்ட குணமிக்க மாவட்டமாக கடலூர் மாவட்டம் திகழ்கிறது.  சுதந்திர போராட்ட களத்தில் பணியாற்றிய பல தலைவர்களின் பணிகள் மறக்கப்பட்டதோ அதேபோல் தொழிற்சங்க வரலாற்றில் பல தலைவர்கள் ஆற்றிய பணி மறக்கப்பட்டது ஒரு தொழிற்சங்க துயரம் ஆகும். நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடும்விதமாக தோழர் ஜெயராமன் அவர்கள் மாவட்ட மாநில மத்திய சங்கங்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் நன்கொடையாக அளித்துள்ளார். அவரது சீரிய பணிக்கு கடலூர் மாவட்ட சங்கம் தலைவணங்குகிறது.

ஓய்வுதியர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.

R அசோகன்

மாவட்ட செயலாளர்

AIBSNLPWA CUDDALORE

No comments:

Post a Comment