Tuesday, 7 March 2023

PENSION ADALAT AT MADURAI ON 3/3/2023

 PENSION ADALAT AT MADURAI ON 3/3/2023


1.3/3/2023 அன்று மதுரையில் ஓய்வூதிய குறை

தீர்க்கும் கூட்டம் (Pension Adalat) நடைபெற்றது. மாவட்ட சங்கத்தின் சார்பாக பத்து பிரச்சனைகளை கொடுத்து இருந்தோம். அதில் ஒன்பது பிரச்சனைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  கீழ்க்கண்ட மூன்று பேரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

1.தோழர்,M பன்னீர்செல்வம் TT VLU அவர்களுக்கு NEPP படி ஓய்வூதிய மாற்றத்திற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 

2. மறைந்த தோழர் சண்முகம் டெக்னீசியன் அவர்களின் மகள் குமாரி மலர்கொடி அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

3. தோழர். M துரை SI அவர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் மாற்றம் செய்யப்படவில்லை. அதற்கான payable copy பொது மேலாளர் (போஸ்டல்) அலுவலகத்திற்கு CCATN நிர்வாகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. தோழர் அவர்களுக்கு வருகின்ற 6,7 தேதிகளில் அவருக்கான ஓய்வூதிய மாற்ற நிலுவை தொகை வரவு வைக்கப்பட உள்ளது. மாவட்டத் தலைவர் மற்றும் தோழர் விநாயகம் ஆகியோர்களின் முயற்சியால் இது சாத்தியமானது. ஒருங்கிணைத்த மாவட்ட சங்க நிர்வாகி தோழர் மணி கள்ளக்குறிச்சி அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக பாராட்டுதல்களைத்  தெரிவித்துக்கொள்கிறோம்.

 திருமதி நித்திலவள்ளி அவர்களுக்கும் குமாரி பத்மபிரியா அவர்களுக்கும் service book, form20 மற்றும் field verification report போன்றவை கடலூர் பிஎஸ்என்எல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்கள். மேலும் சில தகவல்களை சம்பந்தப்பட்ட தோழியர்களிடம் கேட்டுள்ளார்கள். அவைகளை விரைவாக அனுப்பி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். திருமதி நித்திலவள்ளி அவர்களின் southern region boardஆல் வழங்கப்பட்ட disability certificateஐ திருமதி எஸ்தர் AO o/o CCATN அவர்களிடம் கொடுத்து விட்டு வந்துள்ளோம். இரண்டு பிரச்சனைகளிலும் மாவட்ட சங்கம் முழுமையாக தலையிட்டு தீர்த்து வைக்கும்.  சம்பந்தப்பட்டவர்கள் சிறிது பொறுமை காக்க வேண்டும்.

தோழர் J வெற்றி அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் எதிர்மறையான பதில் கிடைத்துள்ளது. இருப்பினும் மாவட்ட சங்கம் தனது முயற்சியை தொடரும்.

தோழியர் ராஜகுமாரி காலஞ்சென்ற தோழியர் அம்சா அவர்களின் மகள் சுமதி ஆகியோர்களுக்கு pension anomaly உத்தரவுப்படி ஓய்வூதிய மாற்ற நிலுவை தொகை வழங்கப்படவில்லை.  இதில் சரியான பார்வை CCATN அலுவலகத்திற்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளோம். அதனை சரி பார்ப்பதாக கூறியுள்ளார்கள்.

திரு. G A கமாலுதீனிடம் சில தகவல்களை கேட்டுள்ளார்கள்.  அவைகளை சமர்ப்பித்தால் அவருடைய துணைவியாருக்கு family pension authorisation வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

திருமதி மதியழகி அவர்களுக்கு தரப்பட வேண்டிய GPF தொகை பிரச்சனை நீதிமன்ற வழக்கால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர் P ஜெயராமன் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர், தோழர் J வெற்றி மாவட்ட சங்க நிர்வாகி தோழர் Rஅசோகன் மாவட்டச் செயலாளர் ஆகியோர்கள் ஓய்வூதிய குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.



No comments:

Post a Comment