விருத்தாசலம் பகுதி
9வது மாதாந்திர கூட்டம்
12.2.2023 ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. பகுதி செயலாளர் தோழர் ரா.ராமலிங்கம் வரவேற்புரை நல்கிட, தோழர். K.சுப்பிரமணியன் (SDE RETD) அவர்களது தலைமையில் கூட்டம் தொடங்கியது.
அடுத்து விருதை ஓய்வூதியர் தோழர் ஜமீல் அவர்களின் துணைவியார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
கூட்டத்தில் CGHS பற்றிய ஐய்யங்களை தோழர்கள் அன்பழகன், மோகன்ராஜ் எழுப்பினார்கள்.
அதனை அடுத்து உளுந்தூர்பேட்டை தோழர் L. ஜெகந்நாதன் (மாவட்ட உதவி செயலர்) நடந்து முடிந்த தர்ணா போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டங்களில் பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டதற்கு நன்றியை மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இறுதியாக இந்திய உதவிப் பொதுச் செயலாளர் தோழர் பா.ஜெயராமன் அவர்கள், தோழர்கள் அன்பழகன், மோகன்ராஜ் இவர்களின் CGHS payment வேறுபாடுகள் பற்றிய ஜய்யங்களுக்கு விளக்கமளித்தார். மற்றும் cghs சேர்வதினால் தோழர் தோழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கூறினார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி தர்ணா போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது,32% பிட்மண்ட் எதன் அடிப்படையில் கேட்கின்றோம் என்பன போன்ற பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார். இறுதியாக தோழர் ஜகந்நாதன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
குடும்ப ஓய்வூதியர் தோழியர். ராஜேஸ்வரி ரங்கநாதன் விருதை அவர்கள் தலா ரூபாய் 1500/-வீதம் மாவட்ட சங்கம் மற்றும் விருதை கிளைக்கு அவரது இளைய மகன் திரு. அய்யப்பன் வாயிலாக வழங்கினார்.



No comments:
Post a Comment