நமது அகில இந்திய நலச்சங்கத்தின் அறைகூவலின் படி மூன்றாம் கட்டமாக ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி 32 சதவீதம் ஃபிட்மெண்டுடன் கூடிய ஓய்வூதிய மாற்றம் வழங்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் 80க்கும் மேற்பட்ட தோழர்கள் கடலூர்,
நெய்வேலி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய ஊர்களிலுருந்து திரளாக கலந்து கொண்டனர்.
கடலூர் பகுதி துணைத்தலைவர் தோழர் T.ராமலிங்கம் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் NFTE-BSNL சம்மேளனச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் வாழ்த்துரை
வழங்கினார். நமது அகில இந்திய உதவிப் பொதுச்செயலர் தோழர் P.ஜெயராமன் அவர்கள்
சிறப்புரை ஆற்றினார்.
சிதம்பரம் பகுதியின் சார்பில் தோழர் T.விஸ்வலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாநிலத் துணைத்தலைவர் தோழர் N.திருஞானம் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டனர்.
விழுப்புரம் பகுதியின் சார்பில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவர் தோழர் G.ராமச்சந்திரன்
தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலர் தோழர் K.வீரராகவன் அவர்கள்
சிறப்புரையாற்றினார். நமது கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் பலர் பேசினர். ஆர்ப்பாட்டதில்
75க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
தோழர் S.நாராயணசாமி தலைமை
தாங்கினார். கடலூர் பகுதி நிர்வாகி தோழர் N.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மூத்தத்
தோழர்கள் கண்டன உரையாற்றினர். 40க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டனர்.
அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட
தோழர்கள், தோழியர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நன்றிகள். போராட்டத்தை
வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றியை கூறுவது மட்டுமல்லாது எதிர்வரும்
காலங்களிலும் இதுபோன்ற ஒத்துழைப்பை நல்கி நம்முடைய கோரிக்கைகளை வென்றெடுப்போம்.
ஒருங்கிணைத்த மாவட்டச் சங்க நிர்வாகிகள், அனைத்து பகுதி நிர்வாகிகளுக்கும்
நெஞ்சார்ந்த பாராட்டுதலை மாவட்டச் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
வெற்றி பெறுவோம் !!






No comments:
Post a Comment