Tuesday, 7 March 2023

விழுப்புரம் மாதாந்திர கூட்டம், மகளிர் தின கூட்டம் 

05/03/2023 காலை 10 மணிக்கு பகுதி துணை தலைவர் தோழர் V பெருமாள் தலைமையில் நடைபெற்றது தமிழ் தாய் வாழ்த்தை S.ராஜு வாசிக்க அஞ்சலி உரையை D.சண்முகசுந்தரம் ஆற்ற வரவேற்புரையை பகுதி ஒருங்கிணைப்பாளர் G.கணேசன் ஆற்ற, மகளிர் தினத்தை முன்னிட்டு நமது சங்க உறுப்பினர் K ராமலிங்கம் TTA அவர்களின் புதல்வி தோழியர் R.நித்தியா MSc யோகா முத்திரை ஆசிரியர் அவர்கள் விழுப்புரம் தோழர்களுக்கு 45 நிமிடங்கள் BP, சுகர், இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் மூட்டு வலி, வாயு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எந்த எந்த முத்திரையை பயன்படுத்தினால் சரியாகும் என்பதை சொல்லி கொடுத்தது முத்தாய்ப்பாக அமைந்தது. வாழ்த்துரை R.செல்வம் மாவட்ட அமைப்பு செயலர், மகளிர் சார்பாக தோழியர் S.மணிமேகலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய துணை பொது செயலர் தோழர் P.ஜெயராமன் பென்ஷன் சம்பந்தமான பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார். திருவெண்ணெய் நல்லூர் முத்துசாமி TM அவர்கள் புதல்விக்கு இரட்டை குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தோழர் S.ராமலிங்கம் டெலிபோன் ஆபரேடர் தற்போது வக்கீல் ஆக பணிபுரிந்து வருகிறார். பணி ஓய்வு பெற்ற தோழர்களின் சில பிரச்சனைகளை செட்டில் செய்து உள்ளார். நமது புதிய உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். அவருடைய பணியினை பாராட்டி அகில இந்திய துணை பொதுச்செயலாளர் தோழர் ஜெயராமன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதேபோல் தோழியர் நித்தியாவிற்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் மற்றும் விழுப்புரம் அலுவலகப் பணி பயன்பாட்டிற்கான ஃபைபர் இன்டர்நெட் இணைப்பு கொடுத்து தங்களது சொந்த செலவில் மோடம் வழங்கிய தோழர்கள் R.செல்வம், N.முனுசாமி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு வந்திருந்த மகளிர்க்கு தமது சொந்த செலவில் அகில இந்திய துணை பொது செயலர் ஜாக்கெட் பிட் பரிசு அளித்து கவுரவித்தார். தோழர் V ஜெயராமன் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment