கள்ளக்குறிச்சி பகுதி ஓய்வூதியர் கூட்டம்
7.3.2023 அன்று முதல் பகுதி கூட்டம் தலைவர் தோழர் K.செல்லமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர் K.வீரராகவன் அவர்கள் துவக்கவுரையாற்றினார். தனது உரையில் "கள்ளக்குறிச்சி பகுதி கிளை சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேலும் ஆரோக்கியமான செயல்பாடு இருக்க வேண்டும்" என்று கூறினார். அகில இந்திய துணை பொதுச்செயலர் தோழர் P.ஜெயராமன் அவர்கள் தனது சிறப்பு உரையில் "ஓய்வு பெற்ற சங்கம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதனையும் இன்றைய நிலைபாட்டினையும் தெளிவாகவும், விளக்கமாகவும் கூறினார். 8.3.2023 மகளிர் தினம் முன்னிட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிருக்கு ஜாக்கெட் பிட், மலர் கொடுத்து கவுரவித்தார். நிறைவாக தோழர் S.மணி நன்றி கூறி முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment