Wednesday, 15 March 2023

  விருத்தாசலம் பகுதி மாதாந்திர கூட்டம்-

மகளிர் தினம் 

12.3.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் விருத்தாசலம் பகுதி தலைவர் M.ஞானசேகரன் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் திரு. L.ஜகந்நாதன் முன்னிலையில் துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் திரு.ராமலிங்கம் வரவேற்புரை நல்கி, அதனை அடுத்து தோழர்கள்  H.சுந்தர்ராஜன் உளுந்தூர்பேட்டை,  V.நல்லதம்பி திட்டக்குடி, கணபதி பெண்ணாடம், ஷேக்ஜமீல் விருத்தாசலம் ஆகியோர் மகளிர் தினம், அதன் பின்னணியையும், மற்றும் சங்க செயல்பாட்டினையும் எடுத்து உரையாற்றினார்கள்.

          அகில இந்திய துணைச்செயலாளர் தோழர் P.ஜெயராமன் கடலூர் அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு நீண்டதொரு வரலாற்று சொற்பொழிவு ஆற்றினார். மற்றும் CGHS, மதுரை அதாலத் நிகழ்வுகள், முடிவுகள், pension revision இன்றைய நிலையைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 

         இறுதியாக தோழர் L.ஜகந்நாதன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.





No comments:

Post a Comment