சிதம்பரம் பகுதி 11 ஆவது மாதாந்திர மற்றும்
மகளிர் தின கூட்டம்
19 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் சன்னதி தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருமதி விஜயலட்சுமி நந்தகுமார், திருமதி ராஜகுமாரி தமிழ்மணி கூட்டுத் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் & மாவட்டத் தலைவர் தோழர் P.ஜெயராமன் மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.அசோகன், மாநில துணைத்தலைவர் தோழர் N. திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மற்றும் சிதம்பரம் பகுதி பொறுப்பாளர் பங்கேற்றனர்.
சிதம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G.S. குமார் கடந்த கால செயல்பாட்டினை சுருக்கமாக விவரித்து மகளிர் கூட்டத்திற்கு வழி விடுத்தார். மகளிர் கூட்டத்திற்கு நிறைவாக நன்கொடை அளித்து செலவு அனைத்தையும் ஏற்று மகளிர் சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ளனர். கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும் ஒரு சிறிய நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. தோழர்கள் T.விஸ்வலிங்கம் பகுதி தலைவர், ஏ ஜெயக்குமார் மாவட்ட உதவி செயலாளர், இஸ்மாயில் மரைக்கார் மாவட்ட துணை தலைவர், டி.பி.குருமூர்த்தி பகுதி உதவி செயலர் மற்றும் மகளிர் பகுதியிலிருந்து திருமதி கீதா ஜவகர், திருமதி திவ்யா தோழர் தங்கைய்யன் மகள், தோழியர் வி. உஷா மகளிர் தின சிறப்புரை நிகழ்த்தினார்கள். குறிப்பாக இவர்களது பேச்சில் மகளிர் சுதந்திரம் மற்றும் மகளிர் பாதுகாப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
மாவட்ட செயலாளர் தோழர் ஆர் அசோகன் அவர்கள் மகளிர் தின சிறப்பு குறித்தும், ஓய்வூதியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறிப்பாக பென்ஷன் ரிவிஷன், மெடிக்கல் அலவன்ஸ் கிடைக்காதது பற்றியும், CGHS , LPD பிரச்சனை பற்றியும் எடுத்துரைத்தார்.
தோழர் N.திருஞானம் தான் சிதம்பரம் பகுதி பொறுப்பாளராக இருப்பதற்கு பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். அவர் தனது வாழ்த்துரையில் மாநில சங்க செயல்பாட்டினையும், சொசைட்டி நிலுவைத் தொகை பெறுவதற்காக படிவங்களை 23ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அந்தந்த பகுதிக்கு அனுப்பி ஒரு பிரதியை மாநிலச் செயலாளருக்கு அனுப்பி AIBSNLPWA சார்பாக வழக்கு தொடுக்க உதவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக அகில இந்திய துணைச் பொதுச்செயலர் தோழர் P.ஜெயராமன் தனது சிறப்புரை மற்றும் நிறைவுறையில் மகளிர் செயல்பாடுகளை பற்றியும் தனக்கு இப்பகுதியில் தங்கையன், கீதா ஜவகர் குடும்பம் மற்றும் பல குடும்பங்களுடன் தொடர்பு இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். அவர் சிறப்பாக பேசிய மகளிர் மூவருக்கு தனது கையாலேயே ஜாக்கெட் பிட் நினைவு பரிசையும் வழங்கினார். நினைவு பரிசுகளை விஜயலட்சுமி நந்தகுமார், திருமதி ராஜகுமாரி தமிழ்மணி ஆகியோர் வழங்கினர். பங்குபெற்ற மகளிர் அனைவருக்கும் பொன்னாடையை தோழர் P.ஜெயராமன் அவர்கள் அணிவித்தார். இந்நிகழ்வில் சிதம்பரம் நகராட்சியில் பணிபுரியும் முன் களப்பணியாளர்கள் லட்சுமி,காயத்ரி ஆகியோர் மகளிர் தின விழா சார்பாக பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ். குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். விழாவினை சிறப்பாக செய்திட்ட சிதம்பரம் பகுதி நிர்வாகிகளுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
*மாவட்டச் சங்கம் கடலூர்*




.jpg)


.jpg)











No comments:
Post a Comment