Monday, 13 March 2023

 திண்டிவனம் பகுதி 

 ஓய்வூதியர் கூட்டம்

மகளிர் தினம் 

10-03-2023 வெள்ளிக் கிழமை காலை 11 மணி அளவில், திண்டிவனம் தொலைபேசி நிலைய வளாகத்தில் திண்டிவனம் பகுதி தலைவர் திரு.R..ராஜேந்திரன் STS அவர்களின் தலைமையில் ,மாவட்ட துணைத்தலைவர் திரு S.நாராயணசாமி அவர்கள் முன்னிலையிலும் துவங்கியது. மகளிர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருமதி.பரிமளா இளநிலை தொலைதொடர்பு அதிகாரி அவர்கள் பஙகேற்று மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கவுரை ஆற்றியதோடு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த மகளிர் அனைவருக்கும் மலர்செண்டு கொடுத்து சிறப்பு செய்தார். நமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.D.தளபதி தொல்காப்பியன் அவர்கள் தனது கரங்களால் கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும் சால்வை அளித்து கவுரப்படுத்தினார். மாவட்ட துணைத்தலைவர் திரு S.நாரயணசாமி அவர்கள் மகளிர் தின விழாவிற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி மகளிர் அனைவரையும் வாழ்த்தி பேசினார். கிளைத்தலைவர் திரு.R.ராஜேந்திரன் STS அவர்கள் நமது பென்ஷன் ரிவிசன் பெறுவதற்காக நமது மாவட்ட சங்கம் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் ஆண் ஒய்வூதியர்கள் மட்டும் அன்றி பெண் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். திரு.விநாயகம் அவர்கள் ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் சான்றிதழின் முக்கியத்துவம் பற்றியும் உரையாற்றினார். 

இவ்விழாவினை எளிய முறையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த ஒருங்கினைப்பாளர் திரு.D.திருவிக்கிரமன் அவர்களுக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு.S.நாரயணசாமி அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார்.










No comments:

Post a Comment