Sunday, 12 March 2023

 மகளிர் தின விழா, கடலூர்

கடலூர் பகுதியின் சார்பில் 11.03.2023 (சனிக்கிழமை) மகளிர் தின விழா மெயின் தொலைபேசி நிலைய கான்ஃபரன்ஸ் ஹாலில் தோழியர் V.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரைக்குப்பின்னர் தோழியர் செல்வரசுமேரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தோழர்.P. ஜெயராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கடலூர் தோழியர் ராஜேஸ்வரி* உரையாற்றினார். தோழியர் விமலா அவர்கள் கவிதை வாசித்தார். 

தோழர் வத்சலா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) கடலூர் அவர்களும், 

கவிஞர் உமா மோகன் புதுச்சேரி அவர்களும் சிறப்புரையாற்றினர்.

விழாவில் கடலூர் சமர்ப்பன் முதியோர் இல்லத்திற்கு இரண்டு மின் விசிறிகளை தோழர் P.ஜெயராமன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பயிலும் 20 பிளஸ் டூ மாணவிகளுக்கு தேர்வெழுதும் வகையில் எழுது பொருட்களும் (Cartridge Pen, Ink Cartridge 3 nos., Scale, Pencil, Eraser and sharpener) வழங்கப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட மகளிர் அனைவருக்கும் கதராடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

 அனைவருக்கும் இனிப்பு, காரம், தேநீர் நாம் ஏற்பாடு செய்திருந்தோம்.

கூடுதலாக கடலூர் Retd SDE K.ஷாஜகான் அவர்களும் தனது புதல்வன் திருமண விழாவையொட்டி அனைவருக்கும் இனிப்பு, காரம் வழங்கினார்.

நமது சங்கத்தின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிப்பதோடு மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்*.

தோழியர் மணிமேகலை அவர்கள் உரையாற்றி நன்றி கூற விழா நிறைவடைந்தது.

 குறித்த நேரத்தில் துவக்கி தொய்வில்லாமல் விழாவினை தலைமையேற்று நடத்திக் கொடுத்த தோழியர் V.விஜயலட்சுமி அவர்களுக்கு நமது நன்றி. மிகச்சிறந்த முறையில் பல அரிய செய்திகளை ஆர்வமாக நாம் கேட்கும் வகையில் சிறப்பாக தொகுத்தளித்த தோழர் வத்சலா அவர்களுக்கும் விடுதலைப்போரில் வீர மகளிரின் பங்களிப்பினை* எடுத்துரைத்த கவிஞர் உமாமோகன் அவர்களுக்கும் நமது நன்றி. 

தாமாக முன்வந்து விழாவிற்கு நன்கொடையளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. விழா சிறப்பாக நடைபெற கருத்தாலும் கரத்தாலும் உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி இரு மடங்கு இனிப்பு, பல மடங்கு மகிழ்ச்சி என விழா சிறக்க வாழ்த்தியோருக்கும் உதவியோருக்கும் மீண்டும் மீண்டும் நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
















No comments:

Post a Comment