Sunday, 18 December 2022

சிதம்பரம் பகுதி மாதாந்திர கூட்டம்

 18 12 22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிதம்பரம் பகுதியில் ஒன்பதாவது மாதாந்திர கூட்டம் திரு T.விஷ்வலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக தொடங்கியது 75 உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிதம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G.S. குமார் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்து தோழர் A.ஜெயக்குமார் மாவட்ட உதவி செயலாளர் அவர்கள் தனது வாழ்த்துரையில் விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டின் நிகழ்வுகளையும் சிறப்பான ஏற்பாடுகளையும் விழுப்புரத்தில் தொடங்கி மீண்டும் சிதம்பரம் வரும் வரை நடந்த நிகழ்வுகளை விரிவாக எடுத்துக் கூறினார். அதன் பென்ஷன் மாற்றம் தாமதத்தினை நீக்கிட அகில இந்திய மாநாட்டின் முடிவின்படி முதல் நிகழ்வாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை காலை அதாவது 19 12 22 கடலூர் ஜி எம் அலுவலகம் முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமாக நடைபெற இருக்கிறது அதனை சிறப்பிக்கும் விதமாக சிதம்பரம் பகுதியில் இருந்து அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியதோடு அல்லாமல் பயணச் செலவிற்காக தனது நன்கொடையாக திரு ரூபாய் 1000 நன்கொடை கொடுத்து துவங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து திரு எஸ் ரவிச்சந்திரன் எஸ் டி ஈ அவர்கள் தனது பங்காக 1000 ரூபாயும், திரு கே செல்வம் அவர்கள் 500 ரூபாயும், திரு பி திருநாவுக்கரசு ரூபாய் 300ம் பகுதி பொருளாளர் திரு.கே.லட்சுமிநாரயணனிடம் அளித்தனர். தோழர் இஸ்மாயில் மரக்காயர் மாவட்ட அமைப்புச் செயலாளர் தனது வாழ்த்துரையில் பென்ஷன் கிடைத்தது எப்படி அதை சிறப்பாக கொண்டாடுவது அல்லாமல் தோழர் O.P.குப்தா அவர்களையும் நினைவு கூற வேண்டும் என்று எடுத்துரைத்தார் அ டுத்து திரு கே சந்திரமோகன் மாவட்ட உதவி தலைவர் அவர்கள் தனது உரையில் ஸி.ஜி.எச்.எஸ்சிகிச்சை பற்றி வழக்கம்போல தெளிவாக எடுத்துரைத்தார் அடுத்தது பென்சனர் போர்டல் எப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது அதை நாம் எவ்வாறு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார். அதனை அடுத்து என் திரு என்.திருஞானம் அவர்கள் தனது வாழ்த்த்ரையில் இங்கே சிறப்பாக அனைவரும் செய்து கொண்டிருக்கிறீர்கள், விழுப்புரம் பகுதி கடலூர் மாவட்டத்திற்கு வழிகாட்டியாக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்றும் வாழ்த்தினார் கடலூர் பகுதி எல்லாவற்றிற்கும் வழிகாட்டியாக இருக்கிறது என்று பெருமைப்பட்டார். சிதம்பரம் பகுதியும் அதற்கு சளைத்தது அல்ல என்ற முறையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று தெளிவாக எடுத்துரைத்தார் அடுத்து நாம் ஏன் புதிய ஓய்வூதிய மாற்றத்தை கேட்கிறோம் அதற்கு சான்றுகள் என்னென்ன தயாரித்திருக்கிறோம் என்று விரிவாக எடுத்துரைத்தார். அதற்கு பெருமளவில் உதவியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அகில இந்திய தலைவர் தோழர் டி.கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய உரையையும், திரு பி.ராமன் குட்டி தலைவர் அகில இந்திய சங்கம் அவர்களது துவக்க உரையையும் ,திரு வி வரப்பிரசாத்ராவ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற அகில இந்திய உதவி செயலாளர் உரையையும் திரு கங்காதர ராவ் முன்னாள் அகில இந்திய பொது செயலாளர் அவருடைய தொகுப்புரையில் இடம் பெற்ற நிகழ்வுகளையும் எடுத்துக் கூறினார் .திரு பி.சாந்தகுமார் அவர்கள் கடலூர் பகுதி சார்பாக பேசினார் என்பதையும் சுட்டி காட்டினார் .

அடுத்து கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் V. இளங்கோவன் தனது உரையில் 19 .12. 2022 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திட சிதம்பரம் பகுதியிலிருந்து உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் 23 .12 .22 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கின்ற திரு. பி ஜெயராமன் அகில இந்திய உதவி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்காக அவருக்கு கடலூர் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது அதிலும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் .

அதனை அடுத்து நமது தலைவர் மற்றும் அகில இந்திய உதவி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற திரு.பி ஜெயராமன் அவர்கள் சிறப்பாக விளக்கமளித்து நமது ஏழாவது ஊதிய கமிஷன் பிரகாரம் ஏன் நாம் ஓய்வூதிய மாற்றத்தை கேட்கிறோம், ஃபிட்மெண்ட் ஃபார்முலா ஜீரோ பர்சன்ட் தேவையில்லை என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார். அதற்கு முன்பாக சிதம்பரம் பகுதி சார்பாக தோழர் ஜெயராமன் அவர்களுக்குபொன்னாடை போர்த்தப்பட்டது. அதனை திரு ஜெயக்குமார் அவர்கள் போர்த்தி பாராட்டினார். மேலும் திருமதி கல்யாணி ரங்கநாதன் அவர்களும் திரு.டி ரவிச்சந்திரன் சேர்ந்து தலைவருக்கு பொன்னாடை போர்த்தினார்கள் .தலைவர் தனது உரையில் தோழர் ரங்கநாதன் உடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.

கடலூர் பகுதி செயற்குழு உறுப்பினர் தோழியர் எஸ்.செல்வரசுமேரி அவர்கள் தன்னால் வரமுடியாத நிலையிலும் தோழர் பி ஜெயராமன் அவர்களை வாழ்த்திட காரைக்காலிலிருந்து சிதம்பரத்திற்கு அவரது மகள் அருள்ஜோதி மேரி மற்றும் ஐயா பிள்ளை என்கிற ஜான் அலெக்ஸை அனுப்பி சிறப்பு செய்தார். மேலும் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு சிதம்பரம் பகுதி ஓய்வூதியர்கள் அனைவருக்கும் கேக்வாங்கி தருவதற்கு விருப்பம் தெரிவித்து ஒரு தொகையும் அளித்துள்ளார் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இன்றைய கூட்டத்தின் முடிவில் சுமார் 40 உறுப்பினர்கள் சிதம்பரம் பகுதியில் இருந்து ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது .அதற்கு பயணப்படி நல்கிய நன்கொடையாளர்களை வாழ்த்தி வணங்குகிறோம் நன்றியுரையினை திரு கே லட்சுமிநாராயணன் பகுதி பொருளாளர் வழங்கினார் அனைவருக்கும் திருமதி முத்தமிழ் குலோத்துங்கன் அவர்கள் மதிய விருந்து உபசரித்து மகிழ்வித்தார்.

*மாவட்டச் சங்கம்


















*

No comments:

Post a Comment