Saturday, 17 December 2022

விழுப்புரம் பகுதி ஆண்டு மாநாடு மற்றும் ஓய்வூதியர் தினம்17/12/2022

 விழுப்புரம் பகுதி ஆண்டு மாநாடு மற்றும் ஓய்வூதியர் தினம்17/12/2022 அன்று விழுப்புரம் ஆசான் மண்டபத்தில் நடைபெற்றது. பகுதி தலைவர் தோழர் G.வேதாசலம் தலைமையில் தேசிய கொடியை மூத்த தோழர் P.செல்வராஜ் உயர்த்த சங்க கொடியை மூத்த தோழர் V.நரசிம்மன் உயர்த்த கோஷ ங்களுடன் கூட்டம் இனிதே ஆரம்பம் ஆனது. பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு வேதாசலம் தலைமை ஏற்க தமிழ்த்தாய் வாழ்த்தை S.ராஜு வாசிக்க அஞ்சலி உரையை D.தஸ்தகிர்கான் ஆற்ற பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G.கணேசன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்ற துவக்க உரைக்கு முன்பாக அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் P.ஜெயராமன் அவர்களுக்கு பகுதி சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் சால்வையை தோழர் K.வீரராகவன் அணிவிக்க, சந்தன மாலையை தோழர் D.சண்முகசுந்தரம் சூட்டினார். மோதிரத்தை தோழர் K.கலிவரதன் அணிவிக்க மலர் கிரீடம் மாநிலத்தலைவர் தோழர் V.சாமிநாதன் அணிவிக்க வாழ்த்து மடலை வாசித்து பகுதி சிறப்பு அழைப்பாளர் தோழர் K ராதாகிருஷ்ணன் அளிக்க விழா சிறப்பாக நடந்தது. 80 வயதுமுடித்த துரைபாபு, கண்ணன், அய்யாக்கண்ணு ஆகிய தோழர்களுக்கு கிரீடம், சால்வை சந்தன மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர் வாழ்த்துரையில் R.அசோகன் மாவட்ட செயலர் வாழ்த்துரை வழங்க, மற்றும் மாவட்ட, மாநில சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள், பகுதி மூத்த தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். சிறப்புரையாக பென்ஷன் பற்றிய பல்வேறு செய்திகளை மாநில தலைவர் தோழர் V.சாமிநாதன் பகிர்ந்து கொண்டார், மதியம் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர்கள் G.ராமசந்திரன், J.வெற்றி தலைமையில் ஆண்டறிக்கை வரவு செலவு கணக்குகளை செயலர், பொருளர், சமர்ப்பிக்க நிர்வாகிகள் பட்டியலை மாநில அமைப்பு செயலர் தோழர்கள் K.வீரராகவன் முன் மொழிய 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தோழர்கள் G.ராமசந்திரன், G.கணேசன், R.அகஸ்டின் ஆகியோர் தலைவர், செயலர், பொருளர் ஆக ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டனர். விழாவை மிக சிறப்பாக செய்திட்ட விழுப்புரம் பகுதி தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்




















🙏

*மாவட்டச் சங்கம்


*

No comments:

Post a Comment