அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கமானது ஒரு குடும்ப கட்டமைப்பை கொண்ட நல சங்கம் என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளோம். கள்ளக்குறிச்சியில் Divisional engineer ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு அய்யாசாமி DOT ஓய்வூதியர் ஒரு நாள் நமது மாவட்ட சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தார். நமது மாவட்ட தலைவர் அவர்கள் அவரிடம் நீங்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறீர்கள் என்று வினவினார். அவரது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தைப் பார்த்து உங்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை என்று கூறினார். அதற்கான பணி அப்பொழுதே தொடங்கப்பட்டது. இந்த பிரச்சனையை மாநிலச் செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உடனடியாக அவர் தலையிட்டு CCATN அலுவலக சரித்திரத்திலேயே முதல் முறையாக இந்த பிரச்சனை விரைவாக தீர்க்கப்பட்டுள்ளது. அதற்காக மாநிலச் செயலாளர் தோழர் சுந்தரகிருஷ்ணன் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கம் தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் மேலும் பல வெற்றிகளை அவர் ஈட்ட வாழ்த்துகிறோம். ஒருங்கிணைத்த தோழர் ராம்குமார் அவர்களுக்கும் மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
AIBSNLPWA CUDDALORE.
No comments:
Post a Comment