Friday, 11 November 2022

திண்டிவனம் பகுதி மாதாந்திர கூட்டம்

 10-11-2022 வியாழன் அன்று திண்டிவனம் AIBSNLPWA கிளையின் மாதாந்திர கூட்டம் திரு.R.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தலைவர் அவர்கள் வருகின்ற டிசம்பர் மாத பென்ஷனர் கூட்டம் சிறப்பு கூட்டமாகவும், பென்ஷனர் தினத்தை சீறும் சிறப்புமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உறுப்பினர்கள் முன் வைத்தார். திரு.S.நாரணசாமி மாவட்ட உதவி தலைவர் அனைவரையும் வரவேற்று பேசினார். அப்பொழுது வருகின்ற பென்ஷர் தினத்தை சிறப்பாக கொண்டாட உறுப்பினர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்க வேண்டும் என வேண்டினார். கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களும் தங்களால் இயன்ற நன்கொடையை உடனடியாக அப்பொழுதே வழங்கினர். சிறப்புரை சீனியர் தோழர்.K.சுப்ரமணியன் அவர்கள் நமது சங்கம் நமக்காக, நமது பென்ஷன் ரிவிஷன் பற்றியும் , அதற்காக அயராது பாடுபடும் நமது மாவட்ட, மாநில, மத்திய சங்கத் தலைவர்கள்,செயலர்கள் முயற்சிகளை பெரிதும் பாராட்டி பேசினார். திரு P.விநாயகம் அவர்கள் ஓய்வூதியர்கள் இம்மாதம் தங்களின் வாழ்நாள் சான்றிதழ் உரிய நேரத்திற்குள் வழங்கிட வேண்டும் என்று வற்புறுத்தி பேசினார். திரு.திருவிக்கிரமன் அவர்கள் அனைவருக்கும் தேநீர் ,பிஸ்கட் வழங்கி உபசரித்தார். திரு.V.குப்பன் அவர்கள் நன்றி கூறினார்.

மாவட்ட சங்கம்




 

No comments:

Post a Comment