தோழமைக்குரிய மாவட்ட சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் (உறுப்பினர்கள்) கவனத்திற்கு.
CCATN அலுவலகம் இன்று(11/11/2022) வங்கிகளில் இருந்து SAAMPANN க்கு மாறிய ஏறத்தாழ 6941 பென்ஷனர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஓய்வூதியரின் பெயர், பழைய PPO NO, புதிய PP0 N0 மற்றும் வாழ்நாள் சான்றிதழ் காலாவதி தேதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பட்டியலில் உள்ள ஓய்வூதியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளோம்.
Comprehensive pension management SYSTEM (CPMS) https://www.dotpension.gov.in/Login/Index என்ற வலைதளத்தில் செல்ல வேண்டும்.
அதில் log in என்ற மெனுவில் கீழ் Create Login Family/migrated Pensioner என்று இருப்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
Login creation for family/migrated Pensioner என்ற window வரும்.அதில் புதிய PPO N0, பிறந்த தேதி, capcha ஆகியவைகளை சரியான முறையில் பதிவிட்டு create OTP என்ற மெனுவை கிளிக் செய்தால் அவருடைய PPOவில் உள்ள அலைபேசி எண்ணிற்கு (mobile no) OTP வரும். அதனைப் பதிவிட்டால் login creation for family/migrated Pensioner என்ற செயல்முறை செயல்படுத்தப்பட்டுவிடும்.
பின்னர் login செய்யவும். Username: new PPO N0, Password: Admin@123,captcha ஆகியவற்றை சரியான முறையில் பதிவிட்டால் ஓய்வூதியருக்கான தகவல்கள் அடங்கிய dashboard open ஆகும். அதில் life certificate expiry (வாழ்நாள் சான்றிதழ் முடியும் தேதி) பதிவிடப்பட்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்கும்பொழுது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் .
Type of Pensioner: service என்பதனை ஓய்வூதியர்கள் செலக்ட் செய்ய வேண்டும். family என்பதனை குடும்ப ஓய்வூதியர்கள் செலக்ட் பண்ண வேண்டும். Organization type: CENTRAL GOVERNMENT
SANCTIONING AUTHORITY: TELECOM
DISBURSING AGENCY: SAMPANN DEPARTMENT OF TELECOM
AGENCY: PR.CCA.TAMIL NADU
PPO NO: NEW PPO N0
ACCOUNT NO (Pension):
மேற்கண்ட தகவல்களை சரியான முறையில் பதிவிட்டால் மேற்கண்ட ஓய்வூதியர்களின் வாழ்நாள் சான்றிதழ் சரியான முறையில் சம்பானில் பதிவாகும் .
என்னதான் மாவட்ட சங்க நிர்வாகிகளும், ஒருங்கிணைப்பாளர்களும் கடுமையாக உழைத்தாலும் சம்பந்தப்பட்ட ஓய்வூதியரின் ஈடுபாடும் அக்கறையும் இருந்தால்தான் நாம் அனைவரும் ஒன்றுபட்டு சரியான திசை வழியில் சென்று நமது இலக்கை அடைய முடியும்.
எனவே உறுப்பினர்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
இன்று C. Anthuraj TT VLU அவர்களுக்கு மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி அக்டோபர் மாத pension ஸ்லிப்பை மாவட்டச் சங்கம் எடுத்து அனுப்பி உள்ளது. அவரது வாழ்நாள் சான்றிதழ் முடியும் தேதி 28.02.2023 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
VRS-2019 விருப்ப ஓய்வில் சென்ற ஓய்வூதியர்கள் 31/01/2023 தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் கொடுத்தால் போதும். ePPOவில் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் 0000 என்று இருந்தால் அந்த ஓய்வூதியர்கள் கட்டாயம் வாழ்நாள் சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை இமெயில் மூலமாக CCATN அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தோழியர் ராணி கள்ளக்குறிச்சி அவர்கள் இந்த மாதமே வாழ்நாள் சான்றிதழ் கொடுத்திருந்தார். அவரது வாழ்நாள் சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை இமெயில் மூலமாக CCATN அனுப்பிய பிறகும் வாழ்நாள் சான்றிதழ் முடியும் தேதி மாறவில்லை. எனவே VRS-2019 விருப்ப ஓய்வில் சென்றவர்கள் 2023 ஜனவரியில் வாழ்நாள் சான்றிதழ் கொடுத்தால் தான் சரியாக இருக்கும்.
தோழமையுடன்
R.அசோகன்
மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment