விழுப்புரம் பகுதியின்
மாதாந்திர கூட்டம்
இன்று 06/11/22 காலை 10 மணிக்கு விழுப்புரம் பகுதி தலைவர் தோழர் ஜி.வேதாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்து S ராஜு, வரவேற்புரை பகுதி செயலர் ஜி கணேசன் வாழ்த்துரையில், தோழர்கள் R.செல்வம், G.ராமசந்திரன், D.சண்முகசுந்தரம்,
K.ராதாகிருஷ்ணன், P.விநாயகம் திண்டிவனம், K.வீரராகவன் ஆகியோரும். மாவட்ட தலைவர் தோழர் ஜெயராமன் அவர்கள் தனது உரையில் பென்சனர்களின் பல்வேறு பிரசனைகள் பற்றி பேசினார் 80 வயது முடித்த குடும்ப ஓய்வூதியர் செஞ்சி தோழியர் எஸ்தர் யசோதா செபாஸ்டியன் அவர்களுக்கு பாராட்டும், தோழியருக்கு மாவட்டத்தின் சார்பில் நினைவுப் பரிசும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தோழர் சண்முகசுந்தரம் ஏற்பாடு செய்த சீனியர் சிட்டிசன்கள் உதவி மையம் சார்பாக தோழர் பிரகாஷ், MSW மாஸ்டர் ஆப் சோசியல் வெல்பர் என்ற அமைப்பின் சார்பாக முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எங்களுக்கு (அவர்களுக்கு) தகவல் தெரிவித்தால் அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாகவும், அது போன்றவர்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் பற்றியும் பேசி நிறைவு செய்தார். கூட்டத்தில் மாவட்ட சங்கத்திற்கு உறுதுணையாக பணிபுரியும் தோழர் விநாயகம் அவர்களுக்கு பகுதி செயலர் தோழர் கணேசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இறுதியாக பகுதி பொருளர் தோழர் M.ராஜ்குமார் நன்றி கூறினார். மாதாந்திர கூட்டத்தை சிறப்பாக நடத்திய விழுப்புரம் பகுதி தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாவட்ட சங்கம் கடலூர்.






No comments:
Post a Comment