Sunday, 9 October 2022

 விருத்தாசலம் பகுதி 

மாதாந்திர கூட்டம் 

   விருதை பகுதி ஓய்வூதியர் நலச் சங்கத்தின் ஏழாவது மாதாந்திர கூட்டம் 9.10.2022 ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் தலைவர் M.ஞானசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தனது தலைமை உரையில் இப்பகுதி கிளையின் நிதி நிலை கவலையாக உள்ளது. எனவும், மருத்துவ அலவன்ஸ் கணிசமாக நமது பகுதியில்  பலருக்கு கிடைத்துள்ளது. ஆகையினால் அனைவரும் தவறாமல் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். வேண்டுகோள் விடுத்தது மட்டுமல்லாமல் தனது பங்காக. மாவட்ட சங்கத்திற்கு ரூபாய்.1000/-விருதை பகுதி கிளைக்கு ரூபாய். 1000/- நன்கொடை அளித்தார். 

        பகுதி செயலாளர் தோழர் ராமலிங்கம் அனைவரையும்  வரவேற்று அகில இந்திய மாநாட்டு லெவி ரூபாய். 50/- தோழர்கள் கொடுத்து உள்ளனர். அளிக்காத தோழர்கள் அனைவரும் தயவு செய்து  உடன் தர கேட்டுக் கொண்டார். 

  தோழர்கள் அன்பழகன் மோகன்ராஜ், பெண்ணாடம் சுப்பிரமணியன் ஆகியோர் மெடிக்கல் அலவன்ஸ், குடும்ப ஓய்வூதியர்களுடனான தொடர்பு சென்னை சொசைட்டி நிலவரங்கள்  என்று  தங்கள் ருத்துக்களை வழங்கினர். தோழர். லாரன்ஸ் தனது உரையில் மாதாந்திர கூட்டம் அனைவரையும் சந்திக்கும் நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது என்று கூறினார். 

பகுதி பொறுப்பாளர் KVR தனது உரையில் 5%DA W.E.F.1.10.22  ,IDA pending since 1.10.2000 to 30.6.2021, life certificate, CGHS பற்றிய விவரித்து பேசினார். 

மாவட்ட தலைவர் தோழர். P.ஜெயராமன் கருத்துரை வழங்கினார். அதில்  1947 லிருந்து DAவை எப்படி பெற்றோம், சம்பளக்கமிஷன் வரலாறு, பென்சன் ரிவிஷன் பெற நம்முடைய போராட்டங்கள், நகரா வழக்கு, 0%பிட்மண்ட், சென்னை சொசைட்டி தற்போதைய நிலை என்ன என்பதை எல்லாம் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். தோழர்கள். திட்டக்குடி நல்லதம்பி, உளுந்தூர்பேட்டை ஜெகநாதன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை வழங்கினர்.

இறுதியாக, ஜெகநாதன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. இன்றைய கூட்டத்திற்கு தேனீர் உபசரிப்பு தோழர்கள் KVR, திட்டக்குடி முருகன். இருவருக்கும் கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது 

மாவட்ட சங்கம்









No comments:

Post a Comment