திண்டிவனம் பகுதி மாதாந்திரக் கூட்டம்
இன்று 10-10-2022 திண்டிவனம் பகுதி மாதாந்திர சிறப்புக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் D.விக்கிரமன் அவர்களின் தீவிர முயற்சியால் தொலைபேசி நிலைய வளாகத்தில் பகுதி தலைவர் தோழர் R.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் திரு. S.நாராயணசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் சமீபத்தில் இறந்த நமது ஓய்வூதியர் மற்றும் ஓயவூதியரின் தாயார் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மிகுந்த கஷ்டப்பட்டு நமக்கு FMA வை அனைவருக்கும் கிடைத்திட அயாரது உழைத்த நமது மாவட்ட சங்க தலைவர், செயலர் மற்றும் முக்கியமான பொறுப்பில் உள்ள அனைவருக்கும் நமது கிளையின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மூத்த தோழர் திரு.K.சுப்ரமணியன் அவர்கள் பென்ஷன் ரிவிஷன் பற்றி விளக்கி பேசினார். தலைவர் ராஜேந்திரன் அவர்கள் CGHSன் முக்கியமான அம்சங்கள் பற்றியும் அதை அனைவரும் பயன்படுத்தி பலன் பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். திரு.P.விநாயகம் அவர்கள் திண்டிவனம் பகுதியில் உள்ள ஓய்வூதியர்கள், மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் அனைத்து விபரங்களயும் சேகரித்து ஒரு DATA BASEஐ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதால் அனைவருடைய விபரங்களையும் அளித்து அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். திரு.Y.ஹாரூன்பாட்சா J.E அவர்கள் நமது மாவட்ட ஓய்வூதியர்களின் நலனுக்காக ஒவ்வொரு வாரமும் CCA அலுவலகத்திற்கு சென்று உதவும் நற்செயலை அனைவரும் பாராட்டினர். திரு.S.நாராயணசாமி அவர்கள் மனநிறைவுடன் மாவட்ட சங்கத்திற்கும் , கிளை சங்கத்திற்கும் நன்கொடை அளிக்க விரும்புவர்கள் அளிக்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். நன்கொடை வழங்கும் நமது ஓயவூதியரின்களின் விபரம் நன்றியுடன் தனியாக வெளியிடப்படும். திரு.ஆறுமுகம் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
மாவட்டச் சங்கம்




No comments:
Post a Comment