Sunday, 9 October 2022

 கடலூர் பகுதி மாதாந்திரக் கூட்டம்

08.10.2022 (சனிக்கிழமை) நமது AIBSNLPWA கடலுார் பகுதியின் மாதாந்திர கூட்டம் பகுதி தலைவர் தோழர் B.கந்தசாமி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. உதவி ஒருங்கிணைப்பாளர் தோழர் V.இளங்கோவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இயற்கை எய்திட்ட தோழர்களின் மறைவிற்கு இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைமையுரைக்கு பின்னர்  தோழர்கள் லோகநாதன், சீனிவாசன், சாந்தகுமார், தோழியர் செல்வரசு மேரி மற்றும்  குமரவேல்  ஆகியோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள, 

மாவட்ட தலைவர் தோழர். P.ஜெயராமன் AIBSNLPWA செயல்பாடுகளை விளக்கினார். பென்ஷன் மாற்றத்திற்கான முயற்சிகளை விவரித்தார். உறுதியாக பென்ஷன் மாற்றத்தைப் பெறுவோம் என நம்பிக்கையூட்டினார். மாவட்ட செயலர் தோழர் R.அசோகன் CGHS, சொசைட்டி, மருத்துவ அலவன்ஸ் பட்டுவாடா, லைஃப் சர்டிபிகேட் ஆகியவற்றைப் பற்றி விளக்கினார். சில தனி நபர் பிரச்னைகளில் தற்போதைய நிலையை விளக்கியதோடு தோழர்கள். ஹாருன்பாஷா, விநாயகம் ஆகியோரின் தன்னலமில்லா உழைப்பையும் ஒத்துழைப்பையும் பாராட்டினார். இன்றைய கூட்டத்தில் எண்பது வயது எட்டிய தோழியர் T.கமலா அவர்கள் கிரீடம் அணிவித்து, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.  தோழியருக்கு மாவட்ட சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. தோழியர் கமலா மாவட்ட சங்கத்திற்கு ₹2000/ நன்கொடை வழங்கினார்.   தோழியருக்கு நன்றிகள். (மேலும் சிலர் நன்கொடை வழங்கினர். அந்த விபரம் தனியே பதிவிடப்படும்)

கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் D.ராஜேந்திரன் அவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவர் சிகிச்சை முடிந்து திரும்ப வரும் வரை உதவி ஒருங்கிணைப்பாளர் தோழர் V.இளங்கோவன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட இக்கூட்டத்தில் முறையான ஒப்புதல் பெறப்பட்டது. லைஃப் சர்டிபிகேட் வழங்குவதற்கான நினைவூட்டலுக்குப் பின் பகுதி பொருளாளர் தோழர். R.நந்தகுமார் நன்றியுரை நிகழ்த்திட கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

மாவட்டச் சங்கம்













 

No comments:

Post a Comment