Sunday, 2 October 2022

விழுப்புரம் பகுதி-மாதாந்திர கூட்டம் 

02/10/2022 அன்று மூத்த தோழர் V.பெருமாள் தலைமையில் நடைெற்றது. 10 தோழியர்கள் உட்பட 80 தோழர்கள் கலந்துகொண்டனர் தமிழ்த்தாய் வாழ்த்து தோழர் ராஜு பாடினார். ஒருங்கிணைப்பாளர் G.கணேசன் வரவேற்புரை ஆற்ற சிறப்புரை தோழர்கள் K வீரராகவன் மாநில அமைப்பு செயலர், P ஜெயராமன் மாவட்ட தலைவர் R அசோகன் மாவட்ட செயலர், K சந்திர மோகன் மாவட்ட துணைச்செயலர், K ராதாகிருஷ்ணன் பகுதி பொறுப்பாளர், D சண்முகசுந்தரம் பகுதி பொறுப்பாளர், G ராமசந்திரன் முன்னாள் பகுதி செயலர் ஆகியோர் ஓய்வுதியர்களின் பிரசனைகள், மெடிக்கல் அலவன்ஸ், CGHS சேரவேண்டிய அவசியம் பற்றி விரிவாக பேசினார்கள். மெடிக்கல் அலவன்ஸ் பெற்ற தோழர்கள் மாவட்ட மற்றும் பகுதி சங்கத்திற்கும், பகுதி மாநாட்டிற்கு, அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடை அளித்தனர். இன்றய கூட்டத்திற்கு தோழர் M சுபான் கான் தேனீர் வழங்கினார். விழுப்புரம் SDE ஆக பணிபுரிந்து DE ஆக பதவி உயர்வு பெற்ற கடலூர் தோழர் சவரிமுத்து அவர்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். தோழருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள். மாவட்ட தலைவர் சால்வை அணிவித்து கவுரவித்தார். தோழர் R.அகஸ்டின் பகுதி உதவி செயலர் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது. விழுப்புரம் பகுதி தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

- மாவட்ட சங்கம் -












No comments:

Post a Comment