தோழமைக்குரிய ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு. முதலில் 797 ஓய்வூதியர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தோம். (கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்) அவர்களுக்கு மெடிக்கல் பில் பட்டுவாடா நடந்துள்ளது. மேலும் 155 ஓய்வூதியர்களின் பட்டியல் கீழே லிங்க்கில் உள்ளது. இந்த இரண்டு பட்டியல்களில் உள்ள ஓய்வூதியர்கள் மட்டும் தங்களுக்கு மெடிக்கல் பில் பட்டுவாடா நடக்கவில்லை எனில் Prncipal G M, CUDDALORE Business area , BSNL,Hospital Road, Cuddalore -607001 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.( மாதிரி கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது) கடிதத்துடன் புதிதாக பெறப்பெற்ற வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் கார்ட் நகல், பான் கார்டு நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். கடிதத்தில் ஓய்வூதியர்களின் அலைபேசி எண்ணையும் HR No அல்லது vendor code No மறக்காமல் குறிப்பிடப்பட வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஓய்வூதியர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக மாவட்ட சங்கம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் அவரவர்க்குரிய பணப்பலனை நம்மால் பெற்றுத் தர முடியும். கடிதத்தை கட்டாயம் ஒருங்கிணைப்பாளர்கள் வழியாகவோ அல்லது அந்தப் பகுதியின் மாவட்ட சங்க நிர்வாகிகள் வழியாகவோ அனுப்ப வேண்டும்.
155 missing pensioners details
மாவட்ட சங்கம்.
No comments:
Post a Comment