தோழமைக்குரிய மாவட்ட சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த பத்து தினங்களாக மெடிக்கல் பில் பட்டுவாடா தரவுகளை பெறுவதற்கு சங்கிலிப்பிணைப்பான விடாமுயற்சியை ஒன்றுபட்டு இணைந்து அனைவரும் உழைத்ததன் காரணமாக இன்று கடலூர் மாவட்டத்திற்கு(Business area) 1.5 கோடி அளவில் மெடிக்கல் பட்டுவாடா செய்வதற்கான பணிகளை மாநில நிர்வாகம் செய்யும்பொழுது ஏறத்தாழ 15 தோழர்களுக்கு வங்கி கணக்கு பிரச்சனை மற்றும் IFSC code பிரச்சனை என்று பட்டியல் மாநில நிர்வாகத்தால் அனுப்பப்பட்டது. உடனே மாவட்ட சங்கம் தலையிட்டு ஏறத்தாழ 13 தோழர்களின் பற்றிய விவரங்களை பெற்று கணக்கு அதிகாரியிடம் கொடுத்து விட்டோம். கடந்த ஒரு வருடமாக வங்கிகள் இணைப்பு காரணமாக கணக்கு எண் மற்றும் IFSC எண் மாற்றங்கள் காரணமாக அவ்வாறு இணைக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஓய்வூதியர்களை புதிய சேமிப்பு கணக்கு புத்தகத்தை பெற்று அனுப்புமாறு வலியுறுத்தி வந்தோம். அதனை காலத்தில் செய்திருந்தால் இந்த பிரச்சனையும் எழுந்திருக்காது. இறுதியாக கீழ்க்கண்ட தோழர்களின் தகவல்கள் தேவைப்படுகிறது.
1.L துரைராஜ். வங்கி கணக்கு எண் சரியில்லை.
HR no 197400743
Vendor no R97400743.
2.M ராமானுஜம்
IFSC code ல் பிரச்சனை உள்ளது.
Vendor no R80212609.
நாளைக்குள் (18/09/2022) மேற்கண்ட 2 ஓய்வூதியர்களின் சேமிப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் நகலை பெற்று தந்தால் திங்கள்கிழமை அதனை கணக்கு அதிகாரியிடம் கொடுத்தால் பிரச்சனை தீரும். மேற்கண்ட 2 ஓய்வூதியர்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். அனேகமாக திங்கள் கிழமை அன்று அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் மெடிக்கல் பட்டுவாடா வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது. ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மாவட்டச் சங்கம் தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஒன்றரை கோடிக்கு மேல் மேலும் 42 லட்சம் அளவிற்கு நிதி நிலையை உயர்த்தித் தருமாறு மாவட்ட நிர்வாகம் மாநில நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளது. கடந்த பத்து நாட்களாக கடுமையாக பணியாற்றி எந்தவொரு ஓய்வுதியருக்கும் பிரச்சனை ஏற்படக்கூடாது என்று காலம் நேரம் பார்க்காமல் பணியாற்றிய இளநிலை கணக்கதிகாரி திருமதி உமா மகேஸ்வரி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓய்வூதியர்கள்பால் அவர் காட்டும் அக்கறை மிகுந்த பாராட்டுக்குரிய செயலாகும். அவருக்கு மாவட்ட சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது
மாவட்ட சங்கம்.
No comments:
Post a Comment