Sunday, 18 September 2022

 சிதம்பரம் பகுதி 

மாதாந்திரக் கூட்டம்

18.9.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நமது பகுதியில் ஏழாவது மாத கூட்டம் சிறப்பாக துவங்கியது கூட்டத்திற்கு திரு T.விஸ்வலிங்கம் பகுதி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை பகுதி ஒருங்கிணைப்பாளர் திரு ஜி எஸ் குமார் அவர்கள் வழங்கினார். அவர் பேசும்போது " கடந்த மாத கூட்டத்திற்கும் தற்போது உள்ள நடைபெறவிருக்க கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து கூறினார்". அதில் முக்கியமாக மருத்துவ பில் செட்டில்மெண்ட் பற்றி கூறினார். அதில் வி ஆர் எஸ் எல் சென்றவர்கள் வங்கிக் கணக்கை என் விபரம் இருக்கிறது குடும்ப நல ஓய்வூதியர்கள் கணவருடைய வங்கி கணக்கில் இருக்கிறது சூப்பர் ஆனுவேஷன் சென்றவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கு விபரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது அதனை சரி பார்த்து சொல்லும்படி கேட்டிருந்து அதில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பிக்கவில்லை.இதனை தூக்கமும் ஓய்வுமின்றி வழங்கிட பெரும் முயற்சி செய்த திரு ஆர்.அசோகன் மாவட்ட செயலர்,கணக்கதிகாரி திருமதி உமாமகேஸ்வரி அவர்களுக்கு நமது நன்றி. திங்கட்கிழமை முதல் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மாவட்ட செயலாளர் கூறியதை கூறினார்.

 அடுத்ததாக திருமதி விஜயலட்சுமி நந்தகுமார் சுசிலா கருணாநிதி ஆகியவருடைய ஸி.ஜி.எச்.எஸ் தொகை வர வேண்டி இருக்கிறது என்று தெரிவித்தார். ஸி.ஜி.எச்.எஸ் செல்வதற்கு திரு என் சுப்பிரமணியன் ,

திருமதி பாரதி தினகரன் தயாராக இருக்கிறார்கள்.

திரு.ஆர்.மாதேஸ்வரனது கம்யூடேஷன் பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.திரு.என்.சண்முகத்திற்கு வரவேண்டும். விசாகப்பட்டினம் ஏ.ஐ.சி மாநாட்டிற்காக 96 பேர் இதுவரை லெவி தொகை கொடுத்திருக்கிறார்கள். இன்றைய கூட்டத்தில் மேலும் 9 பேர் கொடுத்திருக்கிறார்கள் அதையும் சேர்த்து 105

பேர் நமது பகுதியில் இருந்து லெவி பணமாக ரூபாய் தலா ₹ 50/= வழங்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி அடுத்து திருமதி பவானி சசிக்குமார் 10 லட்சம் கொரோனா நிதி உதவி பெற்றுள்ளார்.

இதற்கு பேருதவி புரிந்ததிரு.ஏ.ஜெயக்குமார், திரு.கே.சந்திரமோகன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.எஸ்.ஆதிநாராயணன் என்.இ.பி.பி ஊதிய மாற்றம் கிடைக்க பேருதவி செய்த மாவட்ட சங்கத்திற்கும், நிலுவைத்தொகையில் உள்ள தவறான கண்கீட்டனை கண்டுபிடித்து நிலுவைத்தொகை 12000 மேலும் பெற உதவிய திரு.ஏ.ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.என தனது உரையில் பேசினார்.

 வாழ்த்துரையினை திரு.ஏ.ஜெயக்குமார்மாவட்ட உதவி செயலர்,

திரு.எச்.இஸ்மாயில் மரைக்கார் மாவட்ட அமைப்பு செயலர்,,

திருமதி ராஜகுமாரி தமிழ்மணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்,

திரு.டி.பி.குருமூர்த்தி பகுதி உதவிச் செயலர் வழங்கினர்.

திரு.என்.திருஞானம் மாநில துணைத்தலைவர் சங்க செயல்பாடுகள் பற்றியும்,, மெடிக்கல் பில் பட்டுவாடா பற்றியும் எடுத்துக்கூறினார். திரு.கே.சந்திரமோகன்

அகில இந்திய மாநாடு நடை பெற மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும்,

லெவித் தொகையினை 50க்கு பதில் 100 ஆக வசூலிக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளதாவும் குறிப்பிட்டார். திரு.எம்.குப்புசாமி அவர்கள் சொசைட்டி பணம் எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு விரைவில் கிடைக்க நமது மாநில செயலர் முயற்சி எடுத்து வருகிறார் என்ற பதிலுடன்

இறுதியாக திரு.பி.ஜெயராமன் மாவட்ட தலைவர் பயனுள்ள நீண்ட சொற்பொழிவினை வழங்கினார். இதில் மாவட்ட செயல்பாடு,மாநிலசங்க செயல்பாடு, ஓய்வூதியமாற்றம் ஏன் தேவை,0% பிட்மெண்ட் ஏன் தேவையில்லை, இதற்கு பல சங்கங்கள் ஆதரவு அளிப்பது குறித்தும் கூறி நியாமான ஓய்வூதிய மாற்றத்தினை கட்டாயம் பெறுவோம் எனக்கூறினார்.

திருமதி பி.வி.சிந்து ஏ.ஜி.எம் கடலூர் அவர்கள் நடராஜர்,விநாயகருக்கு படைத்த இனிப்பு மோதகத்தினை வழங்கினார்கள்.

விருந்துபசரிப்பு, கூட்டசெலவுகளை பகுதி சங்கமே ஏற்று நடத்தியது.வருங்கால கூட்டத்திற்கு ஸ்பான்ஸர்கள் பெயர் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

நன்றியுரையினை ஜி.எஸ்.குமார் வழங்கி ஒலி,ஒளி கருவி வழங்கிய திரு D.ரவிச்சந்திரன்  அதனை இடையூறின்றி நிர்வகித்த திரு.எஸ்.சுபாஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் 60 தோழர்கள் (18 தோழியர்கள்உட்பட) கலந்துகொண்டனர். சித்ரான்னம்,மோதகம் வழங்கிய N.ராஜேந்திரன், Vகிருஷ்ணமூர்த்தி,P.V.சிந்து AGM ஆகியோர் வழங்கினர்.











No comments:

Post a Comment