Monday, 12 September 2022

விருத்தாசலம் மாதாந்திரக் கூட்டம்

விருதை ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 11.9.2022ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் துணை தலைவர் M.ராஜலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பகுதி செயலாளர் ரா.ராமலிங்கம்  வரவேற்புரையாற்றினார் .

கடலூர் மாவட்ட தலைவர் பா.ஜெயராமன் கருத்துரை வழங்கி  pension revision, pay revision, CGHS,78.2% போன்றவைகளை விளக்கி, தோழர்களின் கேள்விகளுக்கும் ஒன்றரை  மணிக்கும் மேலாக நின்று  விளக்கமளித்தார். அடுத்து விருதை கிளையின் பொருப்பாளர் தோழர். KVR மிக அற்ப்புதமாக CGHS, அதன் பயன்பற்றியும் விரிவாக விளக்கம் கொடுத்தார்.  கூட்டத்திற்கு 35க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது ஐய்யங்களை களைந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணை செயலாளர் L.ஜெகநாதன் நன்றி கூறினார்.










No comments:

Post a Comment