திண்டிவனம் பகுதி மாதாந்திர கூட்டம்
இன்று 10- 09- 2022 திண்டிவனம் பகுதி மாதாந்திர சிறப்புக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் திரு.D.விக்கிரமன் அவர்களின் தீவிர முயற்சியால் திண்டிவனம் தொலைபேசி நிலைய வளாகத்தில் மாவட்ட துணைத்தலைவர் திரு.S.நாராயணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் திரு,D.திருவிக்கிரமன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்திட, திரு.P.விநாயகம் அவர்கள் திண்டிவனம் பகுதியில் உள்ள ஓய்வூதியர்கள், மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் அனைத்து விபரங்களயும் சேகரித்து ஒரு DATA BASE ஐ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதால் அனைவருடைய விபரங்களையும் அளித்து அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். திரு.Y.ஹாரூன் பாஷா J.E அவர்கள் நமது மாவட்ட ஓய்வூதியர்களின் நலனுக்காக ஒவ்வொரு வாரமும் CCA அலுவலகத்திற்கு சென்று உதவும் நற்செயலை அனைவரும் பாராட்டினர். அவர் CGHS ன் முக்கியத்துவம் பற்றியும், இன்னும் மாறாதவர்கள் CGHS ல் சேர்ந்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொண்டார். திரு J.தர்மலிங்கம் அவர்கள் மாதாந்திர கூட்டத்தில் ஒவ்வொருவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். தோழர்.C.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இனிப்பு, காரம், தேநீர் வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.




No comments:
Post a Comment