Saturday, 10 September 2022

 செய்தி தொகுப்புகள்

  1. 9/09/2022 அன்று அருமைத் தோழர் ஹாரூன் பாஷா அவர்கள் CCATN அலுவலகம் சென்று கீழ்க்கண்ட ஓய்வூதியர்களுக்கு mapping certificateஐ வாங்கி மாவட்டச் சங்க இ மெயில் முகவரியில் அனுப்பி உள்ளார். அதனை சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தோழர் ஹாரூன் பாஷா அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு மாவட்ட சங்கம் தலை வணங்குகிறது. இது மட்டுமல்லாமல் கீழ்கண்ட ஓய்வூதியர்களின் பிரச்சனைகளை CCATN அலுவலகத்திற்கு கொண்டு சென்று மாவட்ட சங்கத்திற்கு மிகுந்த உதவிகரமாக இருப்பதை மாவட்ட சங்கம் நன்றியோடு பார்க்கிறது.

  • தோழர் A.சுப்ரமணியன் TT திட்டக்குடி.
  • தோழியர் மதியழகி குடும்ப ஓய்வூதியர். இந்த பிரச்சனை கடந்த 9 மாதங்களாக நிலுவையில்இருந்து வந்தது.
  • தோழியர் N விஜயா குடும்ப ஓய்வூதியர்.
  • தோழர் R சர்தார் கான் JTO NVI.

2. கீழ்கண்ட ஓய்வூதியர்களுக்கு ERPயில் பான் கார்டு (pan card) எண் பதிவாகவில்லை. எனவே மேற்கண்ட ஓய்வூதியர்கள் தங்களது பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் வழியாக பான் கார்டு நகலை (Xerox) உடனடியாக அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மெடிக்கல் பில் தொகை பட்டுவாடாவிற்கு இது தேவைப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஓய்வூதியர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


3. கீழ்க்கண்ட ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை தோழர் ஹாரூன் பாஷா அவர்கள் CCATN அலுவலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று கீழ்க்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.

  • தோழர் A.R.கலியமூர்த்தி அவர்களின் கோப்பு(file) கிடைத்து விட்டதாகவும் விரைவில் அவருக்கு commutation தொகை வரவு வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
  • தோழர் R .S. வேதாராமன் அவர்களின் Commutation தொகை பெறுவதற்கான sanction அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.
  • தோழியர் மதியழகி அவர்களின் GPF தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
  • தோழர் R.பன்னீர்செல்வம் அவர்களின் NEPP உத்தரவுபடி ஓய்வூதிய மாற்றம் செய்யப்படாததை எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் அவரது சேவை காலத்தில் வித்தியாசம் இருந்ததால் அதனை சரி செய்து மாவட்ட நிர்வாகம் அதனை CCATN அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளது. விரைவில் அவரது பிரச்சனை தீரும்.
  • தோழியர் அம்சா அவர்களின் மகள் தோழியர் சுமதி அவர்களுக்கு பென்ஷன் அனாமலி வழக்கின் தீர்ப்பு படி தரப்பட வேண்டிய life time arrears கொடுக்கப்படாததையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மற்றவர்கள் பிரச்சினைகளை தன்னுடைய பிரச்சனையாக கருதி சேவையாற்றி வரும் தோழர் ஹாரூன் பாஷா அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

4. கீழ்க்கண்ட ஓய்வூதியர்களின் வங்கி கணக்கு ERPயில் dummy என்றுள்ளது. மறைந்த இந்த ஓய்வூதியர்களின் இணையருக்கு (கணவர் அல்லது மனைவி) மெடிக்கல் பில் தொகை பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவர்களிடம் இருந்து அவர்களது சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகலை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

# R பாலசுப்ரமணியன் CDM. 

Vendor code no R 97300291( HR no 197300292) 

# பானுமதி SSS VLU.

Vendor code R98201092 (HR no 198201092)

#. L துரைராஜ் TM NVI.

Vendor code R97400743 (HR no 197400743)

# B குப்புசாமி TM PRT.

Vendor code R98900386

(HR no 198900386).

# M மணவாளன் KMB.

Vendor code R97900526.

(HR no 197900526).

# L மணி TM SNK.

Vendor code R99500684.

(HR no 199500684)

# K பிச்சை வேலுTM NKM.

Vendor code R99301259.

(HR no 199301259)

# T செல்வராஜ் TSO VLU.

Vendor code R98001776.

(HR no 198001776)

5. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி DOT/BSNL பணிபுரிந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாற்றம் வேண்டி தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்கு 6.10.2022 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

6.  Extra increment வழக்கில் நாம் வெற்றி பெற்ற போதிலும் நம் பக்கம் நியாயம் இருந்த போதிலும் தமிழகத்தை தவிர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த பிரச்சனை இல்லை என்ற நிலை ஏற்பட்ட பிறகும் தொலைபேசித் துறை மீண்டும் வழக்கை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறது. ஆனால் அதனை முறியடிக்க நமது சங்கம் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துள்ளது. அனைத்தையும் எல்லோரிடமும் தற்போதைய நிலையில் பகிர்ந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. ஆனால் நமது சங்கம் வெற்றியை ஈட்டுவதற்கு திடமான முயற்சிகளை எடுத்து வருவது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

7. செப்டம்பர் மாதம் சம்பள பட்டியலில் 15 ஓய்வூதியர்களுக்கு, CGHS refund தொகை வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது. என்னதான் மாவட்டச் செயலாளர் மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உறுப்பினர்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வந்தாலும் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகிறது. அவர்களது பிரச்சனைகளில் அவர்களே ஆர்வம் காட்டவில்லை எனில் மாவட்டச் சங்கம் எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி பெறுவதில் சிறிது காலதாமதம் ஆகிறது. எனவே உறுப்பினர்கள் தங்களது மேலான ஒத்துழைப்பை நல்கி தங்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டச் சங்கம் 

No comments:

Post a Comment