Saturday, 20 August 2022

 அமைப்பு தினம் - திண்டிவனம் 

இன்று 20- 08- 2022 திண்டிவனம் ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் அமைப்பு தினம் ஒருங்கிணைப்பாளர் திருவிக்கிரமன் அவர்களின் தீவிர முயற்சியால் தொலைபேசி நிலைய வளாகத்தில் மாவட்ட துணைத்தலைவர் திரு.S.நாராயணசாமி அவர்களின் முன்னிலையில் திரு.S.ரஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கிட, ஒருங்கணைப்பாளர் திரு,D.விக்கிரமன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்திட , தலைவர் S.ராஜேந்திரன் அவர்கள் நமது சங்க 13வது அமைப்பு தினத்தின் முக்கியத்துவம் பற்றியும், இதுவரை நமது சஙகம் வென்றெடுத்த சாதனைகள் பற்றியும், நாம் இனி பெறவேண்டிய கோரிக்கைகள் பற்றியும் மிக விரிவாக எடுத்துறைத்தார். திரு.P.விநாயகம் அவர்கள் CGHS ன் முக்கியத்துவம் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் பேசினார். திரு.G.பாஸ்கர் அவர்கள் CGHS மூலம் தனது துணைவியாருக்கு மேற்கொண்ட மருத்துவ சிகிச்சை யின் அனுபவத்தை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். மாவட்ட துணைத்தலைவர் திரு.S.நாராயணசாமி அவர்கள் அமைப்பு தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி னார். திரு.செல்வராஜ் அவர்கள் நன்றி கூற அமைப்புதினம் மிக சிறப்பாக முடிந்தது. சுமார் 15 க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு நமது சங்க அமைப்பு தினத்தை சிறப்பித்தனர்.





 

No comments:

Post a Comment