விருதை ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
14.8.2022 ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் விருதை தொலைபேசி நிலையத்தில் தலைவர் ஞானசேகரன் அவர்கள் தலைமை தாங்கிட, பகுதி செயலாளர் ரா.ராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர். விருதை N.நாராயணன், உளுந்தூர்பேட்டை தோழர். நல்லதம்பியின் துணைவியார் திருமதி சியாமளா இவர்களின் இவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து சேலம் மாநில மாநாட்டில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் N.திருஞானம் அவர்களை பாராட்டி கதர் துண்டு அணிவிக்கப்பட்டது. தோழர்கள் M.ராஜலிங்கம், திட்டக்குடி நல்லதம்பி, பெண்ணாடம் கணபதி, விருதை லாரன்ஸ், ஜமீல் ஆகியோர் கலந்து கொண்டு சங்க செயல்பாட்டிற்கு ஆலோசனை வழங்கினர். இறுதியாக பெண்ணாடம் தோழர். M.சுப்பிரமணியன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. நிறைவான தோழர்கள் கலந்துகொண்டனர்.




No comments:
Post a Comment